குக் வித் கோமாளியில் இந்த முறை இணையும் மூன்றாவது புதிய நடுவர்!

Written ByRK Spark
Published: Apr 27, 2025, 01:02 PM IST|Updated: Apr 27, 2025, 01:02 PM IST

குக் வித் கோமாளி 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. புதிதாக ஒரு நடுவருக்கு இதில் இணைய உள்ளார்.

குக் வித் கோமாளி1/6

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக கடந்த நிலையில் ஆறாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

குக் வித் கோமாளி2/6

குக் வித் கோமாளி

இந்த ஆறாவது சீசனில் புதிதாக ஒரு நடுவர் இணைய உள்ளார் இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இரண்டு நடுவர்கள் இருக்கின்றனர்.

குக் வித் கோமாளி3/6

குக் வித் கோமாளி

செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் 5வது சீசனில் நடுவர்களாக இருந்தனர். சில பிரச்சினை காரணமாக செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த ஆண்டு வெளியேற்றினார்.

குக் வித் கோமாளி4/6

குக் வித் கோமாளி

இந்நிலையில் புதிய நடுவராக செஃப் கௌஷிக் இந்த ஆண்டு இணைந்துள்ளார். இது இந்த நிகழ்ச்சியின் மீது எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

குக் வித் கோமாளி5/6

குக் வித் கோமாளி

கோமாளிகள் மற்றும் குக்குகளுக்கு இடையே நடக்கும் சுவாரசியமான காமெடிகளின் தொகுப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கும். தமிழில் உள்ள ரியாலிட்டி ஷோக்களில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

 

குக் வித் கோமாளி6/6

குக் வித் கோமாளி

இந்த முறை கோமாளிகளாக பலர் புதிதாக இணைந்துள்ளனர். மேலும் குக்குகளாக யார் யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.