48வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது...!

Written ByKeerthana DeviUpdated byKeerthana Devi
Published: Jan 12, 2025, 04:30 PM IST|Updated: Jan 12, 2025, 04:30 PM IST

சென்னை: 48வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMC மைதானத்தில் 90 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்தவகையில் இன்றுடன் புத்தக கண்காட்சி நிறைவடைகிறது. 

சென்னை புத்தகக் கண்காட்சி1/8

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்தது.

சென்னை புத்தகக் கண்காட்சி2/8

நாளை மறு நாள் பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பண்டிகையைக் கொண்டாடச் சென்றனர்.  

3/8

சென்னை புத்தக கண்காட்சியில் பல்வேறு புதிய எழுத்தாளர்களின் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கடைசி நாளான இன்று வரை புத்தக பிரியர்கள் வந்து பார்வையிட்டு புத்தகம் வாங்கி சென்றனர். 

சென்னை புத்தகக் கண்காட்சி4/8

டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 அன்று முடியும் என்று சொல்லப்பட்டியிருந்தது. அந்தவகையில் இன்றுடன் சென்னை 48வது புத்தக கண்காட்சி சிறப்பாக நிறைவடைகிறது.

 

சென்னை புத்தகக் கண்காட்சி5/8

சென்னை புத்தக கண்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் மனதிற்கேற்ப புத்தகங்கள் அனைத்தும் பல மொழிகளில் விற்பனை செய்யப்பட்டது.

சென்னை புத்தகக் கண்காட்சி6/8

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு மற்றும் மொழிப்பெயர்ப்பு உள்ளிட்ட விதவிதமான வகையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது.

 

சென்னை புத்தகக் கண்காட்சி7/8

இன்றுடன் நிறைவடையும் புத்தக கண்காட்சி மாலை 6 மணியுடன் முடிகிறது. இந்த நிறைவு விழாவில் சென்னை சுப்ரீம் கோர்டு நீதிபதி மகாதேவன் பங்கேற்கிறார்.

சென்னை புத்தகக் கண்காட்சி8/8

சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய். எம். சி.ஏ மைதானத்தில் மக்கள் அலைமோதும் கூட்டத்துடன் அமோகமாக கண்காட்சி நல்ல வருகையை பெற்றது.