CSK decided not to sign sanju samson: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்கும் என தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து சிஎஸ்கே அணி பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
1/6நடந்து முடிந்த ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடியது. முதல் அணியாக தொடரைவிட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இந்த சூழலில், வரும் 2026 ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2/6குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், தற்போது, சில காரணங்களால், இந்த முடிவில் இருந்து பின்வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
3/6அதாவது, நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடந்தது. அப்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜாஸ் பட்லரை கழற்றிவிட்டதால், நிர்வாகம் மீது சஞ்சு சாம்சன் அதிருப்தியில் இருந்ததாகவும், இதன் காரணமாக நிர்வாகம் மற்றும் சாம்சனுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சஞ்சு சாம்சனிடம் இருந்து கேப்டன் பதவியை பிடுங்கி, ரியான் பராக் அல்லது ஜெய்ஸ்வாலுக்கு கொடுக்க அணி நிர்வாகம் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
4/6இந்த நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், சென்னை அணியிலும் தோனிக்கு பின்னர் அந்த இடத்தில் ஒரு சிறந்த வீரர் வேண்டும் என்பதால், இந்த முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
5/6இந்த சூழலில், சஞ்சு சாம்சன் வேண்டும் என்றால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக சென்ற நிலையில், தற்போது வரை இந்த முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிடிவாதமாக இருந்ததால், சஞ்சு சாம்சன் வேண்டாம் என்ற முடிவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
6/6இந்த நிலையில், சஞ்சு சாம்சனை வாங்க முடியாததால், தற்போது டெல்லி அணியில் இருந்து கே.எல். ராகுலை வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.