கழுகு போல் காத்திருக்கும் CSK... லக்னோ கழட்டிவிடும் இந்த 3 வீரர்கள்!

Published: Jul 18, 2025, 10:40 PM IST|Updated: Jul 18, 2025, 10:40 PM IST

ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணி இந்த 3 வீரர்களை விடுவிக்க வாய்ப்புள்ளது. மூவரையும் சிஎஸ்கே (CSK) நிச்சயம் குறிவைக்கும் எனலாம்.

IPL 2026 Mini Auction: மினி ஏலத்தை முன்னிட்டு அனைத்து அணிகளும் பல்வேறு வீரர்களை விடுவிப்பார்கள். இதனால் ஒவ்வொரு அணியின் இருப்புத் தொகையும் அதிகரிக்கும். அந்த பணத்தை கொண்டு மினி ஏலத்தில் தேவையான வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஐபிஎல் மினி ஏலம் 20261/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

ஐபிஎல் 2025 நிறைவடைந்துவிட்டது. அடுத்து ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான (IPL 2026 Mini Auction) எதிர்பார்ப்பும் தற்போது எகிறிவிட்டது.

ஐபிஎல் மினி ஏலம் 20262/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு 10 ஐபிஎல் அணிகளும் சில வீரர்களை விடுவிக்கலாம். அதுமட்டுமின்றி தற்போது ஐபிஎல் அணிகள் இடையே டிரேடிங்கும் நடைபெறுகிறது. 

 

ஐபிஎல் மினி ஏலம் 20263/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

அந்த வகையில் ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் பிளே ஆப் வரை சென்றிருந்தாலும் கூட அவர்கள் சில வீரர்களை விடுவிப்பார்கள். 

 

ஐபிஎல் மினி ஏலம் 20264/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

அதே நேரத்தில் 2025 சீசனில் சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் சொதப்பலாக விளையாடியிருக்கிறது. அவர்களும் சில வீரர்களை விடுவிப்பார்கள். 

 

ஐபிஎல் மினி ஏலம் 20265/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இந்த 3 வீரர்களை விடுவிக்க வாய்ப்புள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வீரர்களின் மீது நிச்சயம் குறிவைக்கும். 

 

ஐபிஎல் மினி ஏலம் 20266/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

மேத்யூ பிரெட்ஸ்கி: 26 வயதான தென்னாப்பிரிக்க வீரர் தற்போது லக்னோவில் இருந்தாலும் ஏற்கெனவே டாப் ஆர்டரில் பல வெளிநாட்டு வீரர்கள் இருக்கின்றனர். அதனால் இந்த சீசனில் இவருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை. அடுத்த சீசனில் இவரை தக்கவைப்பதற்கு பதில் விடுவித்து, ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை எடுக்கலாம். இதனால் லக்னோ அணி பந்துவீச்சில் பலம்பெரும். இவரை லக்னோ ரூ.75 லட்சத்திற்கு ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணிக்கு வெளிநாட்டு ஓப்பனர் தேவை என்பதால் ரச்சின் அல்லது கான்வே இருவரில் ஒருவரை விடுவித்து இவரை எடுக்கலாம். 

 

ஐபிஎல் மினி ஏலம் 20267/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

ஆர்யன் ஜூயல்: உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இவர் வயது 23. இளம் வீரரான இவர் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆவார். நிச்சயம் இவரையும் சிஎஸ்கே விடாது. முதல் தர போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 45க்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார் இவர். லக்னோ அணி இவரை விடுவித்து வேறு இளம் வீரரை எடுக்க வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன் என 2 விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் இவரை விடுவிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இவரை ரூ.30 லட்சத்திற்கு ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ எடுத்தது. 

 

ஐபிஎல் மினி ஏலம் 20268/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

டேவிட் மில்லர்: எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் என ஆகியோர் இருப்பதால் டேவிட் மில்லரை பிளேயிங் லெவனில் வைப்பது கஷ்டம். இவரை ரூ.7.50 கோடிக்கு மெகா ஏலத்தில் எடுத்த லக்னோ நிச்சயம் சும்மா வைக்க முடியாது என்பதால் மினி ஏலத்தில் விடுவிக்க வாய்ப்புள்ளது. இவரை விடுவித்தால் சிஎஸ்கே நீண்ட காலமாக தேடி வரும் பினிஷரை கண்டடையலாம்.