IPL 2025: ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இந்த வீரர் தொடர்ந்து விளையாடினால் நிச்சயம் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதனை இங்கு விரிவாக காணலாம்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்திற்கு முன் 5 வீரர்களை தக்கவைத்தது. RTM பயன்படுத்தி ரச்சின் ரவீந்திராவை எடுத்தது. நூர் அகமதை அதிகபட்சமாக ரூ.10 கோடி கொடுத்து எடுத்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்ன் மைதானத்தில் மோதுகின்றன. இந்தாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள், ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து 13 மைதானங்களிலும் நடைபெற இருக்கின்றன. (Image Credits: BCCI)
அந்த வகையில், சென்னையில் முதல் போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிகளில் பல்வேறு கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அன்றைய தினம் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் (CSK vs MI) மோதுகின்றன. (Image Credits: BCCI)
மும்பை அணியில் (Mumbai Indians) கடந்தாண்டு பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்கு கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், அவர் முதல் போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஸியை பார்த்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3-4 போட்டிகளுக்கு பும்ரா விளையாட மாட்டார். (Image Credits: PTI)
மும்பை அணி ஹர்திக் மற்றும் பும்ரா இல்லாவிட்டாலும் பலத்துடன் காட்சியளிக்கிறது. முதல் 7-8 பேட்டர்களும் பெரியளவில் ஷாட் அடிக்கும் திறன் கொண்டவர்கள். போல்ட், தீபக் சஹார், மிட்செல் சான்ட்னர், கரன் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் என நல்ல பந்துவீச்சு படையும் இருக்கிறது. இளம் வீரர்களும் கொட்டிக்கிடக்கிறார்கள். (Image Credits: Mumbai Indians)
இந்தளவிற்கு பலம் வாய்ந்த அணியை வீழ்த்த வேண்டும் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் பலமான பிளேயிங் லெவனை கட்டமைக்க வேண்டும். பிளேயிங் லெவன் காம்பினேஷனில் சமநிலையை தவறவிடும்பட்சத்தில் தோல்வியும் உறுதியாகிவிடும் எனலாம். இதுகுறித்து பிரபல கிரிக்கெட் வல்லுநரான பிரசன்னா அகோரம் (Pdogg) அவரது யூ-ட்யூப் சேனலில் பேசியிருக்கிறார். (Image Credits: X)
பிரசன்னாவின் பிளேயிங் லெவனை பார்த்தோமானால், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் டாப் ஆர்டரில் இடம்பெறுகிறார்கள். இதையடுத்து, நம்பர் 4இல் ராகுல் திரிபாதி. இவருக்கு பேக்-அப்பாக ஹூடா/விஜய் சங்கர். அடுத்து தூபே, சாம் கரன், தோனி, ஜடேஜா, அஸ்வின் என நம்பர் 9 வரை பேட்டிங் இருக்க வேண்டும் என்கிறார். (Image Credits: Chennai Super Kings)
கடைசி 2 இடங்களில் நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ். இம்பாக்ட் வீரராக கலீல் அகமது. இந்த 12 பேரை விளையாடினால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்கிறார். இதில், சாம் கரன், கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள். தூபே ஓரிரு ஓவர்களை வீசுவார். ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களையே சிஎஸ்கே அதிகம் நம்ப வேண்டியிருக்கிறது என்கிறார், பிரசன்னா. (Image Credits: Chennai Super Kings)
பிரசன்னா பதிரானா குறித்து பேசுகையில், "இதில் சிஎஸ்கே பதிரானாவை (Matheesha Pathirana) சேர்த்து விளையாடினால் நிச்சயம் தகுதிபெறாது. அவர் பழைய பதிரானாவாக இருந்தால் இதை சொல்ல மாட்டேன். அவரை தக்கவைத்ததே தவறுதான். அவர் ஆக்சனை மாற்றியதால் அதிக ஃபுல்டாஸை வீசி வருகிறார். SA20 லீக் போட்டியில் அவரது பந்துவீச்சு மோசமாக இருந்ததால் அணியில் இருந்து விலக்கிவைக்கப்பட்டார்" என்கிறார். (Image Credits: PTI)
மேலும் அவர்,"பதிரானாவுக்கு பதில் பேட்டிங்கை பலமாக்க கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே விளையாட வேண்டும். எல்லிஸை பதிரானாவுக்கு பதில் கொண்டுவந்தாலும் காம்பினேஷன் தவறாகிவிடும். நூர் அகமது அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதே சிறந்த ஒன்று" என்கிறார். இதனால், பதிரானா வேண்டவே வேண்டாம் என்கிறார்.