நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் கோலின் சத்து... நிறைந்த சில உணவுகள்

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் கோலின் சத்தும் அடங்கும். நீரில் கரையும் ஊட்டச்சத்தான இது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மூளை வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல உடல் செயல்பாடுகளுக்கு அவசியம்.

இயற்கையாகவே, நமது உடல் ஓரளவு கோலின் ஊட்டச்சத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது. இருப்பினும், இதனை தேவையான அளவில் பெற, டயட்டில் குளிர் நிறைந்த உணவுகள் மிகவும் அவசியம்.

1 /8

உடலின் பல உறுப்புகளுக்கு, அத்யாவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான கோலின் சத்து, நாள் ஒன்றுக்கு ஆண்களுக்கு 550 மில்லி கிராம் என்று அளவிலும் பெண்களுக்கும் 425 மில்லி கிராம் என்று அளவிலும் தேவை.  

2 /8

நரம்பியல் ஆரோக்கியத்திற்கும், மூளை ஆரோக்கியத்திற்கும் கோலின் சத்து மிக அவசியம். கோலின் சத்து குறைபாட்டால், மன அழுத்தம், தூக்கமின்மை, சோம்பல், எரிச்சல் உணர்வு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

3 /8

ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த பப்பாளி கோலின் நிறைந்த பழங்களில் அடங்கும். இது குடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.  

4 /8

புரதச்சத்து நிறைந்த முட்டையில் கோலின் சத்தும் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக முட்டையின் வெள்ளை கருவில் கோலின் சத்து அதிகம் உள்ளது. பெரிய அளவிலான ஒரு முட்டையில் சுமார் 145 மில்லி கிராம் கோலின் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  

5 /8

சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு சைவ உணவு உண்பவர்களுக்கு புரத சத்தின் சிறந்த மூலமாகும். சோயா மற்றும் டோஃபுவில் அதிக அளவு கோலின் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கப் சோயா பாலில் 81.7 மி.கி கோலின் சத்து  உள்ளது.  

6 /8

ப்ரோக்கலியில் கோலின் சத்து நிறைந்துள்ளது. அதேபோன்று காலிபிளவர், உருளைக்கிழங்கு ஆகியவற்றிலும் கோலின் சத்து நிறைந்துள்ளது. ப்ரோக்கலி மற்றும் காலிஃப்ளவரை அளவிற்கு அதிகமாக வேக விடுவதால், கோலின் சத்து அழிந்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

7 /8

சிக்கன் என்னும் கோழி இறைச்சியில்  கோலின் அதிகம் உள்ளது. 100 கிராம் இறைச்சியில் 73 மில்லி கிராம் கோலின் உள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. எனினும் இதை அளவோடு சாப்பிடுவது நல்லது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.