Tamil Nadu Government, Food Safety : உணவுப் பொருள் கலப்படம், தரம் குறித்து புகார் அளிப்பது எப்படி? என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Government, Food Safety : உணவுப் பொருள் கலப்படம், தரம் குறித்து எப்படி புகார் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை கொடுத்துள்ள முக்கிய அறிவிப்பு சாரம்சத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உணவுப் பொருள் சார்ந்து எந்த கடை வைத்திருந்தாலும் அவர்கள் கட்டாயம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் அந்த கடை மற்றும் விற்பனையாளர் மீது புகார் கொடுக்கலாம்.
தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் இதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் மொபைல் எண் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது அது மாற்றப்பட்டுள்ளது.
அது குறித்தும் உணவுப் பொருள் கலப்படம், தரம் குறித்து எப்படி புகார் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பு கொடுத்துள்ளது.
அதில், உணவுப்பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தியிருந்த புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் 9444042322 தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க மேம்படுத்தப்பட்ட சாட்போட் விரைவில் அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் உணவுப் பொருள் சார்ந்த தங்களின் புகார்களை 9444042322 வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டாம் என உணவுப்பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது
இதற்கு பதிலாக TN Food safety Consumer App-ல் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதவிர unavupukar.fsda@tn.gov.in என்ற மெயில் ஐடிக்கும் புகார் அளிக்கலாம் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.