முருங்கை இலையை தினமும் சவைத்து சாப்பிட்டால்... இந்த 5 நன்மைகள் தேடி வரும்!

Written BySudharsan G
Published: Apr 07, 2025, 09:23 AM IST|Updated: Apr 07, 2025, 09:23 AM IST

Health Tips: முருங்கை இலையை தினமும் தொடர்ச்சியாக சவைத்து சாப்பிட்டு வந்தால் இந்த 5 ஆரோக்கிய கிடைக்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் வலுபெறும்.

முருங்கை இலை நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இதனை குழம்பில் போட்டும் உண்பார்கள், தனியாக உப்பு சேர்த்து வதக்கியும் சாப்பிடலாம். முருங்கை இலையை பொடி செய்தும் சாப்பிடலாம்.

முருங்கை இலை நன்மைகள்1/8

முருங்கை இலை நன்மைகள்

முருங்கை இலையில் (Moringa Leaves) எக்கச்சக்கமான வைட்டமிண்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக வைட்டமிண் ஏ, சி, இ மற்றும் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. 

 

முருங்கை இலை நன்மைகள்2/8

முருங்கை இலை நன்மைகள்

இந்தளவிற்கு முருங்கை இலையை நீங்கள் அப்படியே உட்கொண்டால் உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் நலன் பெறும். தினந்தோறும் முருங்கை இலையை வெறும் வாயில் சவைத்து சாப்பிட்டாலே இந்த 5 ஆரோக்கிய நன்மைகளை கிடைக்கும். 

 

முருங்கை இலை நன்மைகள்3/8

முருங்கை இலை நன்மைகள்

ஆன்ஆக்ஸிடன்ஸ் நிறைந்திருக்கு: முருங்கை இலையில் ஃபிளவனாய்ட்ஸ், பீனாலிக் அமிலங்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இருக்கிறது. இதனால் வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம், செல் சேதமடையாமல் பாதுகாக்கும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் வலுபெறும். 

 

முருங்கை இலை நன்மைகள்4/8

முருங்கை இலை நன்மைகள்

ஆற்றல் அதிகரிக்கும்: முருங்கை இலையை தொடர்ச்சியாக சவைத்து சாப்பிட்டு வந்தால் ஆற்றல் அதிகரிக்கும். இதற்கு இதில் இருக்கும் வைட்டமிண்கள், கனிமங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் காரணமாகும். இதில் உள்ள இரும்புச்சத்து, செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும். இதனால், உடல் சோர்வடையாது, ஆற்றல் அதிகரிக்கும்.

 

முருங்கை இலை நன்மைகள்5/8

முருங்கை இலை நன்மைகள்

ரத்த அழுத்தம் குறையும்: முருங்கை இலையை தினமும் சவைத்து சாப்பிடுவதால் ஹைப்பர்-டென்ஷன் குறையும், ரத்த அழுத்தம் அதிகரிக்காது. முருங்கை இலையில் உள்ள மூலக்கூறுகள் ரத்த நாளங்களை தளர்வடையச் செய்யும், இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.

 

முருங்கை இலை நன்மைகள்6/8

முருங்கை இலை நன்மைகள்

செரிமானம் சீராகும்: முருங்கை இலை செரிமானத்திற்கு அதிகமாக கைக்கொடுக்கும். ஏனென்றால் இதில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. குடல் இயக்கமும் முன்னேற்றம் காணும். இதில் உள்ள சில மூலக்கூறுகள் குடலை சுத்தமாக்கும், செரிமான அமைப்பில் உள்ள நச்சுக்களை நீக்கும். 

 

முருங்கை இலை நன்மைகள்7/8

முருங்கை இலை நன்மைகள்

சரும ஆரோக்கியத்தை சீராக்கும்: முருங்கை இலையில் ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்திருக்கின்றன. இது சருமத்தை காப்பது மட்டுமின்றி, சருமத்தையும் பாதுகாக்கும். இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்கும். உங்களின் இளமையான தோற்றத்தை தக்கவைக்க உதவும்.

 

முருங்கை இலை நன்மைகள்8/8

முருங்கை இலை நன்மைகள்

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.