2025ல் இதுவரை ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இங்கே.
Players Who Retired In 2025: இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட இந்த ஆண்டில் பல வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். அதில் சில சிறு வயதிலேயே ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ். அவர் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். அவரது வயது 35 ஆகும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கடந்த மார்ச் 4ஆம் தேதி ஓய்வு அறிவித்தார். தற்போது அவரது வயது 35 ஆகும்.
முஷ்பிகுர் ரஹீம் வங்கதேசம் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். அவர் கடந்த மார்ச் 5ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது வயது 38 ஆகும்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அவரது வயது 38 ஆகும்.
இந்த அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த மே 12ஆம் தேதி ஓய்வு அறிவித்தார். அவரது வயது 36 ஆகும்.
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் மேத்யூஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். அவரது வயது 38 ஆகும்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல், ஜூன் 2ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். அவரது வயது 36 ஆகும்.
தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ஹென்ரிச் கிளாசென் ஜூன் 2ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். அவரது வயது 33 ஆகும்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா கடந்த ஜூன் 6ஆம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். அவரது வயது 36 ஆகும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் இன்று (ஜூன் 10) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அவரது வயது 29 மட்டுமே ஆகிறது.