Sanju Samson CSK Trade: சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் வைத்த 3 டிமாண்ட்களை சிஎஸ்கே நிராகரித்ததாக கூறப்படுகிறது.
Chennai Super Kings: கடந்த 2025 ஐபிஎல் சீசன் நிறைவடைந்த ஓரிரு மாதங்களிலேயே சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் பரவின. இந்த பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதாக முன்னர் தகவல் வந்த நிலையில், தற்போது சிஎஸ்கே மொத்தமாகவே பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
1/8ஐபிஎல் மினி ஏலம் (IPL 2026 Mini Auction) வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனால், டிரேடிங் பேச்சுவார்த்தையும் தற்போது வேகமெடுத்துள்ளது.
2/8அந்த வகையில், பெரும் பரபரப்பை எழுப்பிய சஞ்சு சாம்சன் - சிஎஸ்கே டிரேடிங் பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது, சஞ்சு சாம்சனை டிரேட் (Sanju Samson Trade) செய்யும் முடிவில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
3/8தோனிக்கு மாற்று வீரராக ஒரு விக்கெட் கீப்பர் பேட்டராகவும், கேப்டன் மெட்டீரியலாகவும் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே பார்த்தது. இதனால், டிரேடிங்கில் சஞ்சுவை குறிவைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியிடம் டிரேடிங் செய்தது.
4/8ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சனுக்கும் பிரச்னை நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், சிஎஸ்கே நடத்திய பேச்சுவார்த்தையால் சஞ்சு ராஜஸ்தானை விட்டு வெளியேறுகிறார் என தகவல்கள் கூறின. ஆனால் தற்போது வரை இது உறுதியாகவில்லை.
5/8சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய ராஜஸ்தான் சிஎஸ்கேவுக்கு மூன்று டிமாண்டுகளை வைத்திருந்தாக கூறப்பட்டது. இந்த மூன்று டிமாண்டுகளையும் நிராகரித்த பின்னரே, சிஎஸ்கே இந்த டிரேட் பேச்சுவார்த்தையில் பின்வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
6/8முதலில், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவரை டிரேட் செய்ய வேண்டும் என ராஜஸ்தான் கேட்டுள்ளது. இதை சிஎஸ்கே ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
7/8அடுத்து ஷிவம் தூபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டதாகவும், அதையும் மறுத்த சிஎஸ்கே, தற்போது விளையாடும் எந்த வீரரையும் டிரேட் செய்ய விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சஞ்சு சாம்சனை All-in Cash டிரேட் மூலம் பெற சிஎஸ்கே திட்டமிட்டது. ஆனால் அது கைக்கூடவில்லை. சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு (Chennai Super Kings) வர அதிக வாய்ப்பு இருந்தாலும் கூட, டிரேட் பேச்சுவார்த்தை சரிவராததால் அது நிறைவேறவில்லை.
8/8கேகேஆர், டெல்லி அணிகளும் கூட சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது சஞ்சு சாம்சன் மினி ஏலத்திற்கு விடுவிக்கப்படுகிறாரா, டிரேட் செய்யப்படுகிறாரா அல்லது தக்கவைக்கப்படுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.