CSK: 2026 ஐபிஎல் தொடருக்கு முன் 4 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்க உள்ளது.
Chennai Super kings: ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு தொடரைவிட்டு முதல் அணியாக வெளியேறியது. இதன் காரணமாக வர இருக்கும் 2026 ஐபிஎல் தொடரை வெல்ல சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டம் தீட்டி வருகிறது. சில வீரர்களை விடுவித்து, புதிய வீரர்களை எடுக்கும் முடிவில் உள்ளனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணி கழட்டிவிட இருக்கும் 4 முக்கிய வீரர்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
1/6நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் பல ஆண்டுகளுக்கு பின்னர் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில் அவர் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் சரிவர விளையாடவில்லை. 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினர்.
2/6சென்னை அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே 6 போட்டிகளில் விளையாடி, 156 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் அவரை விடுத்து புதிய வீரரை எடுக்க சென்னை அணி திட்டம் தீட்டி இருக்கும்.
3/6ரூ. 3.40 கோடிக்கு ராகுல் திரிபாதி சென்னை அணியால் வாங்கப்பட்டார். ஆனால் அவர் சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை. 5 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 55 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் இவரை விடுக்க சென்னை அணி தயாராக இருக்கும்.
4/6சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.1.7 கோடிக்கு தீபக் ஹூடா வாங்கப்பட்டார். அவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 7 போட்டிகளில் வெறும் 31 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
5/6சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை டிரேட் முறை மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வாங்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டு வருகிறது. முன்னதாக சிஎஸ்கே நிர்வாக அதிகாரி ஒருவரும் இதனை உறுதி படுத்தி உள்ளார். இதன் காரணமாக சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சனை வாங்கும் பட்சத்தில் சென்னை அணியின் ஓப்பனிங் பிரச்சனை முடிவுக்கு வரும்.
6/6அதேபோல், ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன், தென்னாப்பிரிக்க வீரர் டோனோவன் ஃபெரீரா உள்ளிட்டோரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த Major League Cricket தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனோவன் ஃபெரீரா சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.