CSK எடுக்கும் முக்கிய முடிவுகள் - மினி ஏலத்தில் எவ்வளவு தொகை கையில் இருக்கும்?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு பல முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. இதன்மூலம், மினி ஏலத்திற்கு எவ்வளவு பர்ஸ் தொகையுடன் சிஎஸ்கே செல்லும் என்பதை இங்கு காணலாம்.

CSK IPL 2026 Mini Auction Plan: அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்டார், ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோர் டிரேட் செய்யப்படும் நிலையில், சிஎஸ்கே அடுத்து மினி ஏலத்தை முன்னிட்டு எடுக்க இருக்கும் முக்கிய முடிவுகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

1 /8

ஐபிஎல் 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் மினி ஏலம் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

2 /8

இதை முன்னிட்டு, ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நவ. 15ஆம் தேதிக்குள் இறுதிசெய்யும். 

3 /8

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் கடைசி இடத்தில் நிறைவு செய்ததால், அதிக வீரர்களை சிஎஸ்கே விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4 /8

ரவிசந்திரன் அஸ்வின் ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இதனால், ரூ.9.75 கோடி சிஎஸ்கே ஏல பர்ஸில் சேர்ந்துவிடும். ஜடேஜாவை (ரூ.18 கோடி) டிரேட் செய்து, சஞ்சு சாம்சனை (ரூ.18 கோடி) சிஎஸ்கே பெறுகிறது. அதேநேரத்தில், சாம் கரணையும் டிரேட் செய்வதால் அவரின் ரூ.2.4 கோடி மட்டும் சிஎஸ்கேவின் ஏல பர்ஸில் சேரும். 

5 /8

சஞ்சு சாம்சன் அணிக்கு வருவதாலும் ஏற்கெனவே ஆயுஷ் மாத்ரே ஓபனிங்கில் இருப்பதாலும், பேக்-அப் ஓபனராக ஷேக் ரஷீத் இருப்பதாலும் டெவான் கான்வே (ரூ.6.25 கோடி), ரச்சின் ரவீந்திரா (ரூ. 4 கோடி) ஆகியோரை சிஎஸ்கே விடுவிக்கும் என கூறப்படுகிறது. 

6 /8

மேலும், பல இந்திய பேட்டர்களை ரிலீஸ் செய்யவும் சிஎஸ்கே திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ராகுல் திரிபாதி (ரூ.3.40 கோடி), தீபக் ஹூடா (ரூ.1.70 கோடி), வன்ஷ் பேடி (ரூ. 55 லட்சம்) ஆகியோர் அந்த லிஸ்டில் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆன்ட்ரே சித்தார்த் (ரூ. 55 லட்சம்), விஜய் சங்கர் (ரூ.1.20 கோடி) கூட விடுவிக்கப்படலாம் என்றாலும் இவர்கள் தமிழக வீரர்கள் என்பதால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.

7 /8

பதிரானா மற்றும் நாதன் எல்லீஸ் ஆகியோரை சிஎஸ்கே தக்கவைக்கும் என கூறப்படுகிறது. நாதன் எல்லீஸை டிரேட் செய்ய பல அணிகள் முன்வந்த போதிலும் அவரை சிஎஸ்கே விடுவிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இவர்களில் யார் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என்பதே கேள்வியாகும்.

8 /8

இதன்மூலம், சிஎஸ்கே வரும் மினி ஏலத்தில் ரூ.30 கோடி வரை  பர்ஸ் தொகையுடன் மினி ஏலத்தில் களமிறங்கும் என கூறப்படுகிறது. இதனால், ஏலத்தில் கேம்ரூன் கிரீன் உள்ளிட்ட ஆல்-ரவுண்டருக்கும், இந்திய அல்லது வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு முழு மூச்சாக சென்று கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.