CSK இந்த இந்திய வீரரை கழட்டிவிடாது... ஏலத்தில்விட்டால் மவுஸ் அதிகமாகலாம்!

Chennai Super Kings: வரும் ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே அணி இந்த இந்திய வீரரை விடுவிக்காது. அவரை ஏலத்தில் விடுவித்தாலும் அவர் அதிக விலைக்கு போக வாய்ப்புள்ளது. 

IPL 2026 Mini Auction: வரும் டிசம்பர் மாதத்தில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் என கூறப்படுகிறது. மினி ஏலத்தில் வீரர்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும். 

1 /8

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2023ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், 2024 மற்றும் 2025 என அடுத்தடுத்த சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.  

2 /8

இதனால், 2026ஆம் ஆண்டு சீசனில் சிறந்த அணியை கட்டமைக்க சிஎஸ்கே அணி பிளான் போட்டுள்ளது. 2026 சீசன்தான் தோனிக்கும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும், பிளமிங்கிற்கும் இருக்கும் கடைசி சான்ஸ் எனலாம். 8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்களை தக்கவைக்கலாம் என்பதால் சிஎஸ்கே சில வீரர்களை விடுவிக்க  திட்டமிடும்.  

3 /8

அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என தற்போது சிறந்த வீரர்கள் சிஎஸ்கேவில் இருக்கின்றனர். சில வீரர்களை மட்டும் விடுவித்துவிட்டு, ஏலத்தில் தகுந்த வீரரை எடுத்தாலே, 2026 சீசனில் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு வருவது 50% உறுதியாகிவிடும்.   

4 /8

குறிப்பாக, ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரவிஸ், உர்வில் பட்டேல், அன்சூல் கம்போஜ் என சிறந்த இளம் வீரர்கள் இருப்பதால் சிஎஸ்கேவின் எதிர்காலமும் சிறப்பாகவே இருக்கிறது. கடந்த சீசனிலேயே நல்ல காம்பினேஷன் இல்லாததுதான் சிஎஸ்கேவின் பிரச்னையாக இருந்தது.   

5 /8

இதையொட்டி, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி,  தீபக் ஹூடா, விஜய் சங்கர், சாம் கரன் உள்ளிட்டோரை சிஎஸ்கே விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அது உறுதியான செய்தியில்லை என சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. யார் யாரை விடுவிப்பார்கள் என்பது உறுதியாகவில்லை என்றாலும் ஒரு சிலரை மட்டும் நிச்சயம் தக்கவைப்பார்கள் எனலாம்.   

6 /8

அந்த வகையில், சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் ஒரே போட்டியில் கூட விளையாடாத குர்ஜப்னீத் சிங்கை சிஎஸ்கே நிச்சயம் விடுவிக்காது என்பதை உறுதியாக சொல்லலாம். கடந்த சீசனில் இவருக்கு காயம் ஏற்பட்டு விலகியதை தொடர்ந்தே பிரவிஸ் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐபிஎல் விதிகளின்படி 25 வீரர்கள் இருந்தால் போதும் என்ற நிலையில், குர்ஜப்னீத் சிங் மற்றும் பிரவிஸ் இருவருமே அடுத்த சீசனில் அணியில் தொடரலாம்.  

7 /8

இதுமட்டுமின்றி, குர்ஜப்னீத் சிங் ஐபிஎல் தொடருக்கு பின் டிஎன்பில் தொடரில் விளையாடினார். அதில் 7 போட்டிகளில் 5 விக்கெட்டை மட்டும் அவர் வீழ்த்தியிருந்தாலும் அடுத்து துலீப் டிராபி தொடரில் 2 போட்டிகளில் 3 இன்னிங்ஸில் 10 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அடுத்து ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டிகளிலும் இந்திய ஏ அணிக்காக சுமாராக பந்துவீசியிருந்தார். 2 இன்னிங்ஸில் 2 விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்தார்.   

8 /8

தற்போது ரஞ்சி கோப்பை தொடரும் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அணிக்காக குர்ஜப்னீத் சிங் விளையாடி வருகிறார். ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டை தற்போது வீழ்த்தி குர்ஜப்னீத் மிரட்டியிருக்கிறார். 26 வயதான இவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் சிஎஸ்கே அணி இவரை நிச்சயம் கைவிடாது. இவரை மெகா ஏலத்தில் சிஎஸ்கே ரூ.2.2 கோடிக்கு எடுத்தது. இவரின் வேரியஷன்கள் டெத் ஓவர்களில் பயன்படும். இவர் கலீல் அகமதிற்கு பேக்அப்பாக இருப்பார். குர்ஜப்னீத் சிங்கால் மற்றொரு இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அகமதிற்கு பிரச்னை வரலாம்.