ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக இந்த 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே!

ஐபிஎல் 2025 சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே கழட்டிவிடும் வீரர்களை பற்றி பார்ப்போம்.

1 /6

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் எதுவுமே சரியாக அமையவில்லை. ஏலத்தில் எடுக்கப்பட்ட சில வீரர்கள் அணிக்கு தேவையான பலன்களை கொடுக்கவில்லை. இதனால் ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே கழட்டி விடும் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

2 /6

சாம் கர்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை அணியில் இணைந்த சாம் கர்ரன் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறார். இதனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் கழட்டிவிட அதிக வாய்ப்பு உள்ளது. குறைந்த விலையில் மினி ஏலத்தில் கிடைத்தால் அவரை எடுப்பார்கள்.

3 /6

டேவான் கான்வே கடந்த சீசன்களில் சென்னை அணிக்கு சிறப்பாக விளையாடிக் கொடுத்த டேவான் கான்வே தற்போது சிறப்பான பார்மில் இல்லை. மேலும் சில இளம் வீரர்கள் ஓப்பனிங்கில் நன்றாக விளையாடுவதால் ரச்சின் அல்லது டேவான் கான்வே இருவரில் ஒருவரை மட்டும் சென்னை அணி தக்கவைத்துக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

4 /6

விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் ரன்கள் அடிக்கும் ஒரு இந்திய வீரர் வேண்டும் என்பதால் விஜய் சங்கரை ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி விஜய் சங்கர் பெர்பார்ம் செய்யவில்லை. மேலும் பேட்டிங் செய்வதற்கும் மிகவும் சிரமப்படுகிறார். இதனால் இவரை சென்னை அணி வெளியேற்றலாம்.

5 /6

ராகுல் திருப்பாதி ரகானேவிற்கு பதிலாக சென்னை அணி ஏலத்தில் எடுத்த வீரர் ராகுல் திருப்பாதி. ஆனால் ஓப்பனிங் இறங்கினாலும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்படுகிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் இவரை நிச்சயம் அணியிலிருந்து வெளியேற்றும்.

6 /6

அஸ்வின் கிட்டத்தட்ட 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வின் பவுலிங்கில் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கேவில் இணைந்தாலும் அவரது மோசமான பார்ம் அணிக்கு பாதகமாக இருக்கிறது. இதனால் இவரை நேரத்தில் விட்டு குறைந்த விலைக்கு மீண்டும் எடுக்கலாம்.