இந்த பவுலருக்கு பதிலா இவர கொண்டு வாங்க.. ஆர்சிபி-யை வீழ்த்த சிஎஸ்கே போடும் ஸ்கெட்ச்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மறுநாள் (மார்ச் 28) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அடுத்தப்போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ள சென்னை அணி முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

1 /6

18வது ஐபிஎல் சீசன் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடி உள்ள நிலையில், இன்று முதல் 2வது சுற்று போட்டிகள் தொடங்குகிறது. 

2 /6

அந்த வகையில், சென்னை அணி தனது முதல் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

3 /6

அடுத்ததாக சென்னை அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்ள இருக்கிறது. ஆர்சிபி அணியுடன் மோதுவதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.   

4 /6

இந்த நிலையில், கடைசி நேரத்தில் அணிக்கு ரன்களை குவித்து வெற்றி பெற நல்ல ஹிட்டர் வேண்டும் என்ற நோக்கத்தில், இங்கிலாந்து வீரர் ஜேமி ஓவர்டன்னை பிளேயிங் 11ல் கொண்டு வரலாம என தகவல்கள் வெளியாகி வருகிறது. 

5 /6

ஜேமி ஓவர்டன் பெரிய சிக்சர்களை அடிக்க கூடியவர். எளிதில் போட்டியை மாற்றக்கூடியவர் என்பதால் சாம் கரண் இடத்தில் இவரை கொண்டு வரலாம் என கூறப்படுகிறது. 

6 /6

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி (இம்பேக்ட்), ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விகீ), அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், மதீஷா பத்திரனா, நூர் அகமது, தீபக் ஹூடா.