Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2026 மெகா ஏலத்தில் குறிவைக்க வாய்ப்புள்ள 5 Uncapped வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
IPL 2026 Mini Auction: சிஎஸ்கே அணி ஜடேஜா, சாம் கர்ரண் உள்பட 12 வீரர்களை விடுவித்திருக்கிறது. சாம்சனை டிரேட் மூலம் பெற்றுள்ளது. இன்னும் அதிகபட்சம் 9 வீரர்களை எடுக்கலாம். அதில் அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரர்களையும் எடுக்கலாம். இந்தச் சூழலில் சிஎஸ்கே அணி குறிவைக்கும் 5 Uncapped வீரர்களை இங்கு காணலாம்.
சிஎஸ்கே அணி வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.43.4 கோடியுடன் களமிறங்குகிறது. கேகேஆர் அணிக்கு பின் அதிக தொகையுடன் வரும் அணி சிஎஸ்கேதான்.
கேம்ரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், பதிரானா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களின் மீது நிச்சயம் ஒரு கண் இருக்கும். அதேநேரத்தில், இந்திய வீரர்களின் தேவையும் சிஎஸ்கேவுக்கு இருக்கிறது.
அந்த வகையில், சிஎஸ்கே அணி வரும் மினி ஏலத்தில் குறிவைத்திருக்கும் இந்த 5 Uncapped வீரர்கள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
ஆகாஷ் மத்வால்: இந்திய வேகப்பந்துவீச்சாளர்களாக கலீல் அகமது மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோர் முன்னணியில் இருக்கிறார்கள். இதில் கலீல் அகமதிற்கு பேக்-அப்பாக குர்ஜப்னீத் சிங், முகேஷ் சௌத்ரி ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால், அன்சுல் கம்போஜுக்கு தற்போது பேக்-அப் இலலை. எனவே, கடந்த ஐபிஎல் சீசன்களில் கலக்கிய ஆகாஷ் மத்வாலை சிஎஸ்கே நிச்சயம் எடுக்க முற்படும். 17 ஐபிஎல் போட்டிகளில் 23 விக்கெட்டை இவர் கைப்பற்றி இருக்கிறார்.
ஆகிப் நபி: இவரும் சரி, ஆகாஷ் மத்வாலும் சரி சிஎஸ்கே அணியின் ரேடாரில் மட்டுமின்றி பல அணிகளின் தேவையாக இருக்கிறார்கள். எனவே, இவர்களுக்கு கோடிகள் நிச்சயம் கொட்டும். சிஎஸ்கே அணி தொகையுடன் இருப்பது ஒருபக்கம் மற்றும் கேகேஆர் அணிக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளரின் தேவை குறைவு என்பதாலும் சிஎஸ்கேவுக்கான வாய்ப்பு குறைவாகும்.
மஹிபால் லோம்ரோர்: இந்திய அணிக்கு பின்வரிசையில் ஃபினிஷர் தேவை. ஆல்-ரவுண்டராக இருந்தாலும் டபுள் ஜாக்பாட் என்றாலும், அதிரடி வீரராக இருந்தாலே போதும். மஹிபால் லோம்ரோர் இதற்கு முன் ஆர்சிபி, குஜராத் அணியில் இருந்த நிலையில், பெரியளவில் சோபிக்கவில்லை. ஆனால், உள்நாட்டு தொடர்களில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் நிலையில் இவரையும் சிஎஸ்கே எடுக்க நினைக்கும்.
கார்த்திக் சர்மா: இவரும் உள்நாட்டு தொடர்களில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருபவர். 19 வயதான இவரை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர் அதிரடி ஃபினிஷராகவும் அறியப்படுகிறார்.
பிரசாந்த் வீர்: உத்தர பிரதேச அணியின் பின்வரிசை வீரரான இவர், ஜடேஜாவுக்கு மாற்று வீரர் என பேசப்படுகிறார். இடதுகை சுழற்பந்துவீச்சில் மட்டுமின்றி பினிஷங் ரோலிலும் இவர் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவர் மீதும் சிஎஸ்கேவுக்கு ஒரு கண் இருக்கலாம்.