Which Team Sanju Samson Joins In Ipl 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலக உள்ள நிலையில், அவர் எந்த அணியில் இணையப்போகிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் தொடரை நிறைவு செய்தது.
இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்தினர் இடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டதால், வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அந்த அணி நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக்க முயற்சிப்பதால், அதிருப்தியில் இருக்கும் சஞ்சு சாம்சன் அந்த அணியை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில், அவருக்கு டிமெண்ட் பெரிதாக இருக்கும். அவர் வெளியேறுவதாக தகவல் வெளியான உடனேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை தர வேண்டும் என்றால், ஜடேஜா போன்றோரை கேட்பதாகவும் இதற்கு சிஎஸ்கே அணி சமதம் தெரிவிக்காததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், வரும் ஐபிஎல் 2026ல் சஞ்சு சாம்சன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் என பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஒருவேளை சஞ்சு சாம்சனும் அந்த அணியில் இணைந்தால் மும்பை அணி கூடுதல் பலம் பெறும் என பேசுகின்றனர்.