ஐபிஎல் 2025 சீசன் தொடங்க உள்ள நிலையில், பல வீரர்கள் காயம் காரணமாகவும், சில தனிப்பட்ட காரணங்களாலும் வெளியேறி உள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய வீரர்களை பற்றி பார்ப்போம்.
உம்ரான் மாலிக் (கேகேஆர்) இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சமீபத்தில் மீண்டும் காயம் அடைந்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து. கடந்த ஆண்டும் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.
அல்லா கசான்ஃபர் (மும்பை இந்தியன்ஸ்) ஆப்கானிஸ்தான் அணியின் லெக் ஸ்பின்னர் அல்லா கசான்ஃபர் மும்பை அணியால் ரூ. 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் 2025ல் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக முஜீப் உர் ரஹ்மான் அணியில் இணைந்துள்ளார்.
பிரைடன் கார்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிரைடன் கார்ஸ் ஐபிஎல் 2025ல் இருந்து விலகி உள்ளார். SRH அணியால் ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு எடுக்கப்பட்டார்.
லிசாத் வில்லியம்ஸ் (மும்பை இந்தியன்ஸ்) காயம் காரணமாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவரை மும்பை அணி ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து.
ஹாரி புரூக் (டெல்லி கேபிடல்ஸ்) இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் இவரை ரூ. 6.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அடுத்த 2 ஆண்டுகள் இவர் ஐபிஎல்லில் விளையாட முடியாது.