மும்பை அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது.
மார்ச் 23ம் தேதி நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா விளையாட மாட்டார்.
கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மெதுவான ஓவர்கள் வீசியதற்காக ஒரு போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐபிஎல் 2025ன் முதல் போட்டியில் ஹர்திக் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல் போட்டிக்கு மட்டும் மும்பை நிர்வாகம் கேப்டனாக நியமிக்க உள்ளது.
ஐபிஎல் 2024ல் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி, 10 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதனால் இந்த ஆண்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பலம் வாய்ந்த அணியை ஏலத்தில் எடுத்துள்ளனர். சான்டனர், தீபக் சஹர் போன்ற சென்னை அணியின் வீரர்களையும் ஏலத்தில் எடுத்துள்ளனர்.
பும்ரா காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.