CSK vs MI: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
IPL 2025: கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் 2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 25ஆம் தேதி தொடங்குகிறது. அதிலும் சென்னை - மும்பை போட்டி என்றால் சொல்லவேண்டியதே இல்லை. ஐபிஎல் தொடரின் மொத்த கொண்டாட்டத்தையும் அப்போட்டியில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் யார் அதிகம் வெற்று பெற்றுள்ளார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
நடந்த 17 சீசன்களில், அதாவது இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 36 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர்.
அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மறுப்பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதிலும் இறுதி போட்டியில் 4 முறை மோதி உள்ளன. 2010, 2013, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் மோதி இருக்கிறது.
இதிலும் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. சென்னை அணி 2010ஆம் ஆண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் மும்பை அணி 2013, 2015 மற்றும் 2019 என 3 இறுதி போட்டிகளில் சென்னையை வீழ்த்தி இருக்கிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது கூடுதல் சுவாரஸ்யம்.
இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியிலேயே மோதிக்கொள்வதால், ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், ஹர்திக் பாண்டியா, பும்ரா அகியோர் இப்போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.