July 12 Today Rasipalan: ஆனி மாதம் 28ஆம் நாளான இன்று (ஜூலை 12) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Today Horoscope In Tamil: இன்று ஆனி 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) விசுவாசுவ வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 12:00 முதல் மதியம் 12:50 வரை; அமிர்த காலம் - நள்ளிரவு 12:01 முதல் நள்ளிரவு 1:39 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 04:36 முதல் காலை 05:24 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 10:52 முதல் மதியம் 12:25 வரை; எமகண்டம் - மதியம் 3:31 முதல் மாலை 5:05 வரை; குளிகை - காலை 7:45 முதல் காலை 9:18 வரை; துரமுஹுர்த்தம் - காலை 8:41 முதல் காலை 9:31 வரை, மதியம் 12:50 முதல் மதியம் 1:40 வரை; தியாஜ்யம் - மதியம் 2:09 முதல் மதியம் 3:48 வரை. சூரியோதயம் - காலை 6:12 சூரியஸ்தமம் - மாலை 6:38. வாரசூலை: சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று மேல் நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேஷம்: வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. வர்த்தகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழப்பம் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் வெண்மை நிறம் அஸ்வினி : முயற்சிகள் மேம்படும். பரணி : ஒப்பந்தங்கள் சாதகமாகும். கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரிஷபம்: புதுவிதமான திட்டங்களை மனதில் உருவாக்குவீர்கள். கொடுக்கல் வாங்கலில் திருப்தியான சூழல் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். தன வரவுகளில் இருந்த தாமதம் குறையும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் கிருத்திகை : திருப்தியான நாள். ரோகிணி : தாமதம் குறையும். மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்: பேச்சு திறமைகள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் உருவாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் மிருகசீரிஷம் : ஒத்துழைப்பான நாள். திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும். புனர்பூசம் : சேமிப்புகள் குறையும்.
கடகம்: நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். சிந்தனைப்போக்கில் சில மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கல்வி பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். பூசம் : லாபகரமான நாள். ஆயில்யம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சிம்மம்: பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : முன்னேற்றமான நாள். பூரம் : இன்னல்கள் விலகும். உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
கன்னி: மனதில் புது விதமான புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். நுட்பமான சிந்தனைகள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் மேம்படும். பெருமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : புத்துணர்ச்சியான நாள். அஸ்தம் : பாராட்டுக்கள் கிடைக்கும். சித்திரை : லாபங்கள் மேம்படும்.
துலாம்: உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீக தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும். சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
விருச்சிகம்: மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் அனுசரித்துச் செல்வதன் மூலம் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் உடல் உழைப்பு கூடுதலாக இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனுஷம் : மேன்மை உண்டாகும். கேட்டை : ஆரோக்கியத்தில் கவனம்
தனுசு: சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மூலம் : குழப்பங்கள் நீங்கும். பூராடம் : அனுகூலம் ஏற்படும். உத்திராடம் : விரயம் உண்டாகும்.
மகரம்: கல்வி பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் முன்கோபம் இன்றி விவேகத்துடன் செயல்படவும். தற்பெருமையான பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். உத்தியோகம் விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாகன பராமரிப்பு தொடர்பான செலவுகள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திராடம் : மாற்றமான நாள். திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும். அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.
கும்பம்: நினைத்த சில பணிகளை அலைச்சல்களுக்கு பின்பு முடிப்பீர்கள். மனம் விட்டு பேசுவதன் மூலம் கவலைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சாதகமான சூழல்கள் அமையும். துன்பம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : கவலைகள் குறையும். சதயம் : ஆரோக்கியத்தில் கவனம் பூரட்டாதி : சாதகமான நாள்.
மீனம்: மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உருவாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும். ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.