இன்றைய ராசிபலன்: இந்த 3 ராசிகளுக்கு சிறப்பான வாய்ப்புகள் வரும் - கெட்டியா பிடிச்சுகோங்க

Today Horoscope In Tamil: மாசி மாதம் 20ஆம் நாளான இன்று (மார்ச் 4) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், நல்ல நேரம், இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை இதில் காணலாம். 

Daily Raasipalan In Tamil: இன்று மாசி மாதம், 20ஆம் நாள் செவ்வாய்கிழமை (மார்ச் 4) குரோதி வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 12:07 முதல் மதியம் 12:55 வரை; அமிர்த காலம் - இரவு 10:10 முதல் இரவு 11:39 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 04:58 முதல் காலை 05:46 வரை. அசுபமான காலம்: இராகு - மதியம் 3:29 முதல் மதியம் 4:58 வரை; எமகண்டம் - காலை 9:33 முதல் காலை 11:02 வரை; குளிகை - மதியம் 12:31 முதல் மதியம் 02:00 வரை; துரமுஹுர்த்தம் - காலை 08:57 முதல் காலை 09:45, இரவு 11:18 முதல் நள்ளிரவு 12:07 வரை; தியாஜ்யம் - மதியம் 01:20 முதல் மதியம் 02:48 வரை. சூரியோதயம் - காலை 6:35, சூரியஸ்தமம் - மாலை 6:27. வாரசூலை: சூலம் - வடக்கு, பரிகாரம் - பால். இன்று கீழ் நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

 

1 /13

பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

2 /13

மேஷம்: உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படும் எண்ணம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் அஸ்வினி : நெருக்கடிகள் மறையும். பரணி : மதிப்பளித்து செயல்படவும். கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

3 /13

ரிஷபம்: எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வர்த்தக பணிகளில் பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் கிருத்திகை : சேமிப்புகள் குறையும்.  ரோகிணி : தாமதம்  உண்டாகும். மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும். 

4 /13

மிதுனம்: கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சேமிப்புகள் மேம்படும். சேமிப்பு விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் மிருகசீரிஷம் : சேமிப்புகள் மேம்படும். திருவாதிரை : செல்வாக்கு உண்டாகும். புனர்பூசம் : புத்திக்கூர்மைகள் வெளிப்படும்.

5 /13

கடகம்: மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். தன வருவாய் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்காலம் தொடர்பான செயல் திட்டங்களை வடிவமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் புது விதமான இலக்குகள் பிறக்கும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம் புனர்பூசம் : மதிப்புகள் மேம்படும்.  பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். ஆயில்யம் : இலக்குகள் பிறக்கும். 

6 /13

சிம்மம்:  எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான சூழல்கள் உருவாகும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு  அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மகம் : வாய்ப்புகள் உருவாகும். பூரம் : அங்கீகாரங்கள் கிடைக்கும். உத்திரம் : குழப்பங்கள் குறையும்.   

7 /13

கன்னி:  பணிபுரியும் இடத்தில் சிற்சில அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். எதிலும் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் :  அனுசரித்து செல்லவும்.  அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.  சித்திரை : ஆர்வமின்மையான நாள்.

8 /13

துலாம்:  கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான  எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தினை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.  சுவாதி : இன்னல்கள் குறையும். விசாகம் : மாற்றமான நாள்.

9 /13

விருச்சிகம்:  மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின்  ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் விசாகம் : புத்துணர்ச்சியான நாள். அனுஷம் : நிதானம் வேண்டும்.  கேட்டை : ஒத்துழைப்புகள் கிடைக்கும். 

10 /13

தனுசு:  பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் மேம்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மூலம் : ஆர்வம் மேம்படும்.  பூராடம் : புதுமையான நாள். உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

11 /13

மகரம்:  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திராடம் :  ஒத்துழைப்பு கிடைக்கும்.  திருவோணம் : ஆதாயகரமான நாள். அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

12 /13

கும்பம்: முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். சதயம் : ஆதரவான நாள். பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும். 

13 /13

மீனம்: மனதில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள்.  பயணம் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். அடமான பொருட்கள் பற்றிய கவலைகள் ஏற்படும். தனவரவுகள் மூலம் வங்கி இருப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம் பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.  உத்திரட்டாதி : அனுபவம் ஏற்படும். ரேவதி : மேன்மையான நாள்.