May 30 Today Rasipalan: வைகாசி மாதம் 16ஆம் நாளான இன்று (மே 30) 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Daily Raasipalan In Tamil: இன்று வைகாசி 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை (மே 30) விசுவாசுவ வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 11:52 முதல் மதியம் 12:42 வரை; அமிர்த காலம் - மாலை 7:10 முதல் இரவு 8:42 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 04:28 முதல் காலை 05:16 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 10:44 முதல் நண்பகல் 12:17 வரை; எமகண்டம் - மதியம் 3:23 முதல் மாலை 04:56 வரை; குளிகை - காலை 7:37 முதல் காலை 9:10 வரை; துரமுஹுர்த்தம் - காலை 8:33 முதல் காலை 9:23 வரை, மதியம் 12:42 முதல் மதியம் 1:31. தியாஜ்யம் - காலை 10:03 முதல் நண்பகல் 11:34 வரை, காலை 5:22 முதல் 6:57 வரை; சூரியோதயம் - காலை 6:04 சூரியஸ்தமம் - மாலை 6:30. வாரசூலை: சூலம் - மேற்கு, பரிகாரம் - வெல்லம். இன்று சம நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேஷம்: எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான தைரியம் உண்டாகும். புதிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவு ஏற்படும். சிறுதூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம் அஸ்வினி : திருப்பங்கள் ஏற்படும். பரணி : தேடல் உண்டாகும். கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்: நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பொன், பொருட்சேர்க்கை ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பும், அறிமுகமும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான சுழல் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ரோகிணி : மாற்றம் ஏற்படும். மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
மிதுனம்: சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். கடன் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். நஷ்டம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும். புனர்பூசம் : ஆர்வமின்மையான நாள்.
கடகம்: எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் அமையும். சில அனுபவங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விட்டுக் கொடுத்து செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம் புனர்பூசம் : சேமிப்புகள் குறையும். பூசம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும். ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சிம்மம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். காப்பீடு பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். தேர்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மகம் : காரியங்கள் நிறைவேறும். பூரம் : அபிவிருத்தியான நாள். உத்திரம் : மதிப்பு உயரும்.
கன்னி: ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்புகள் கிடைக்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஜாமீன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். விலகி சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான பேச்சுக்களால் மேன்மை ஏற்படும். விலை உயர்ந்த பொருட்சேர்க்கை ஏற்படும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம் உத்திரம் : ஈடுபாடு ஏற்படும். அஸ்தம் : சிந்தித்து செயல்படவும். சித்திரை : மேன்மை ஏற்படும்.
துலாம்: உடன்பிறப்புகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனை மேம்படும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் சித்திரை : மகிழ்ச்சியான நாள். சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும். விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்: புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்களால் அனுபவம் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் நெருக்கடியான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் விசாகம் : மாற்றம் உண்டாகும். அனுஷம் : அனுபவம் அதிகரிக்கும். கேட்டை : நெருக்கடியான நாள்.
தனுசு: சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மனதில் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம் மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூராடம் : புரிதல் உண்டாகும். உத்திராடம் : முதலீடுகளில் கவனம் வேண்டும்.
மகரம்: சிறு தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். சிந்தனை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் உத்திராடம் : முன்னேற்றமான நாள். திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும். அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
கும்பம்: கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். அலுவலகம் சார்ந்த பணியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடினமான விஷயங்களையும் எளிதாக புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. சிக்கல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அவிட்டம் : திறமைகள் வெளிப்படும். சதயம் : புரிதல் உண்டாகும். பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
மீனம்: தாய் வழியில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வாகனங்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உறவுகள் இடத்தில் தெளிவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும். உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள். ரேவதி : கையிருப்புகள் குறையும்.