Today Horoscope In Tamil: மாசி மாதம் 22ஆம் நாளான இன்று (மார்ச் 6) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், நல்ல நேரம், இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை இதில் காணலாம்.
Daily Raasipalan In Tamil: இன்று மாசி மாதம், 22ஆம் நாள் வியாழக்கிழமை (மார்ச் 6) குரோதி வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 12:07 முதல் மதியம் 12:54 வரை; அமிர்த காலம் - இரவு 09:01 முதல் இரவு 10:33 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 04:57 முதல் காலை 05:45 வரை. அசுபமான காலம்: இராகு - மதியம் 2:00 முதல் மதியம் 3:29 வரை; எமகண்டம் - காலை 6:34 முதல் காலை 08:03 வரை; குளிகை - காலை 09:32 முதல் காலை 11:01 வரை; துரமுஹுர்த்தம் - காலை 10:32 முதல் காலை 11:19, மதியம் 03:17 முதல் மாலை 04:05 வரை; தியாஜ்யம் - மாலை 04:26 முதல் மாலை 05:58 வரை, காலை 05.33 முதல் 07.07 வரை. சூரியோதயம் - காலை 6:34, சூரியஸ்தமம் - மாலை 6:27. வாரசூலை: சூலம் - தெற்கு, பரிகாரம் - தைலம். இன்று மேல் நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முகத்தில் புதுவித பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும். பரணி : ஒத்துழைப்புகள் உண்டாகும். கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
மன நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்களை திட்டமிட்டு செயல்படவும். புது விதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : கவனம் வேண்டும். ரோகிணி : ஆர்வம் உண்டாகும். மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.
உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம். மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும். திருவாதிரை : நம்பிக்கை மேம்படும். புனர்பூசம் : செலவுகள் உண்டாகும்.
கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். துறைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூசம் : குழப்பங்கள் குறையும். ஆயில்யம் : ஒத்துழைப்பான நாள்.
வியாபார பணிகளில் தன வரவுகள் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். வர்த்தக பணிகளில் லாபங்கள் மேம்படும். நண்பர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நட்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மகம் : வரவுகள் கிடைக்கும். பூரம் : மேன்மை உண்டாகும். உத்திரம் : லாபங்கள் மேம்படும்.
தன வருவாயில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் உத்திரம் : தடைகள் குறையும். அஸ்தம் : சிந்தித்து செயல்படவும். சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சித்திரை : அனுபவம் உண்டாகும். சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும். விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும் அனுபவமும் உண்டாகும். வழக்கு விசயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த வேறுபாடுகள் குறையும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம் விசாகம் : அனுபவம் உண்டாகும். அனுஷம் : அறிமுகம் ஏற்படும். கேட்டை : வேறுபாடுகள் குறையும்.
வழக்கு விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வர்த்தக செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தேர்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : புரிதல்கள் ஏற்படும். பூராடம் : சிந்தித்து செயல்படவும். உத்திராடம் : உதவிகள் சாதகமாகும்.
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்த தன்மை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திராடம் : இலக்குகள் பிறக்கும். திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். அவிட்டம் : ஆதரவான நாள்.
குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்கள் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். புகழ் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம் அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும். சதயம் : புரிதல்கள் அதிகரிக்கும். பூரட்டாதி : தேடல்கள் பிறக்கும்.
வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இழுபறியான கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : மாற்றமான நாள். உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள். ரேவதி : புத்துணர்ச்சியான நாள். பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.