டிசம்பர் மாதம் தமிழ் சினிமா வெளியீடுகள் 2025

Written ByVijaya Lakshmi
Published: Nov 23, 2025, 06:23 PM IST|Updated: Nov 23, 2025, 06:23 PM IST

பெரிய நடிகர்களின் எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள் இந்த டிசம்பரில் திரையரங்குகளை அதிரவைக்கத் தயாராக உள்ளன.

1/7

சிறை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு ‘சிறை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 25 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2/7

லாக்டவுன் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கும் 'லாக்டவுன்' திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

3/7

மகாசேனா தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மகாசேனா'. இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வருகிற டிச. 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

4/7

ரெட்ட தல ரெட்ட தல திரைப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

5/7

சர்வம் மாயா இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

6/7

வா வாத்தியார் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வா வாத்தியார் என்ற திரைப்படம் தான் திரையில் வெளியாகவுள்ளது. நலன் குமாரசாமி இயக்கிய இப்படம் டிசம்பர் 12 ஆம் தேதிக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வந்தது.

7/7

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பிரதீப் ரங்கநாதன், எஸ். ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள Lik படம் டிசம்பர் மாதம் 18-ந்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.