Delhi New Rules For Stray Dogs: டெல்லியில் தெருநாய்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளது. மனிதர்கள்-நாய்கள் இடையே மோதலை குறைத்து, ரேபிஸ் தடுப்பதே குறிக்கோளாகும்.
Delhi New Rules For Stray Dogs: இதற்காகவே டெல்லி அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்கள் நேரடியாக உத்தரவிட்டதால், இப்போது தெருநாய்கள் பராமரிப்பு சட்டரீதியான கட்டுப்பாட்டில் வருகிறது.
1/8சுப்ரீம் கோர்ட்:
டெல்லி அரசு தெருநாய்கள் பராமரிப்பு குறித்து புதிய விதிமுறைகள் வெளியிட்டுள்ளது. ரேபிஸ் நோய் தடுப்பு முக்கிய குறிக்கோள். மனிதர்கள் மற்றும் நாய்கள் இடையே மோதல் குறைக்க வேண்டும். இது சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி வந்துள்ள தகவலாகும்.
2/8யார் பொறுப்பு?
MCD (Municipal Corporation of Delhi) NDMC (New Delhi Municipal Council) DCB (Delhi Cantonment Board)இந்த மூன்று அமைப்புகளும் தெருநாய்கள் ஸ்டெரிலைசேஷன், தடுப்பூசி, பராமரிப்பு அனைத்தையும் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
3/8Animal Birth Control Rules: 2023 விதிகளின் படி தெருநாய்கள் அனைத்தும் ஸ்டெரிலைசேஷன் செய்யப்பட வேண்டும். AWBI அங்கீகரித்த NGOகளே பணியாற்ற முடியும். அனைத்து மருத்துவர், ஹாண்ட்லர், ஸ்டாஃப் அனைவரும் AWBI-யின் பயிற்சியுடன் மட்டுமே பணி செய்ய அனுமதி உண்டு.
4/8மையங்களின் வசதிகள்: ஒவ்வொரு நாய் பராமரிப்பு மையத்திலும் தனி கேனல்கள், பவர் பேக்கப்புடன் ஆப்ரேஷன் தியேட்டர், நாய் எடுத்துச் செல்ல வாகனம், கழிவு மேலாண்மை வசதி ஆகியவை இருக்க வேண்டும். மேலும், 30 நாட்கள் வரை பதிவுகளை வைத்திருக்க CCTV கேமரா அவசியம்.
5/8உணவு இடங்கள்: தெருநாய்களுக்கு உணவு கொடுக்க குறிப்பிட்ட இடங்கள் தீர்மானிக்கப்படும். RWA மற்றும் மக்கள் சேர்ந்து இந்த இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகள், மூத்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உணவு இடம் சுத்தமாக வைக்கப்பட வேண்டும், மீதியுணவை அப்படியே போடக் கூடாது.
6/8ஆபத்தான நாய்கள்: ரேபிஸ் அல்லது கடிக்கும் பழக்கம் உள்ள நாய்கள் தனியாக பிடிக்கப்பட்டு பராமரிக்கப்படும். ரேபிஸ் நாய்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, இறந்த பின் சுத்தமாக அகற்றப்படும். சாதாரண நாய்கள் ஸ்டெரிலைசேஷன், தடுப்பூசி செய்யப்பட்ட பின் அதே இடத்தில் மீண்டும் விடப்படும்.
7/8கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு: ஒவ்வொரு மாதமும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்படும். வருடாந்திர அறிக்கை AWBI-க்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளிகள், NGOகள், மக்கள் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவர். இதில் நாய்களின் நடத்தை, உணவு கொடுக்கும் முறை, தடுப்பூசி குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
8/8கோர்ட் உத்தரவு & நீதிபதிகள்:
சுப்ரீம் கோர்ட் bench: ஜஸ்டிஸ் விக்ரம் நாத், NV அஞ்சாரியா, சந்தீப் மேத்தா. முந்தைய உத்தரவின்படி நாய்களை நிரந்தரமாக shelter-க்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்ப்பு இருந்தது. புதிய உத்தரவில் அது நிறுத்தப்பட்டது (stay order). இப்போது நாய்களை ஸ்டெரிலைஸ் மற்றும் தடுப்பூசி செய்து அதே இடத்தில் விட வேண்டும்.