Home Loan Tips: சொந்த வீடு வாங்குவது பெரும்பாலானோருக்கு முதல் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்க, வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வழங்கி உதவுகின்றன. இந்நிலையில், வசில வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு குட் ந்யூஸ் வழங்கியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ரெப்போ விகிதத்தை 0.50% குறைத்த பிறகு, பல வங்கிகள் வீடு மற்றும் பிற கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் இருவருமே இதன் நேரடிப் பலனைப் பெறுவார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025 ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (0.50%) குறைத்துள்ளது. இதன் பிறகு, நாட்டின் 7 முக்கிய வங்கிகள் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) மற்றும் வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை (EBLR) குறைத்துள்ளன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜூன் மாதத்தில் வட்டி விகிதங்களை 8.85% என்ற அளவிலிருந்து 8.35% என்ற அளவில் குறைத்துள்ளது, புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 12, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா SBI RLLR விகிதத்தை 8.25% இலிருந்து 7.75% + கிரெடிட் ரிஸ்க் பிரீமியம் (CRP) ஆகக் குறைத்துள்ளது. புதிய விகிதம் ஜூன் 15, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா EBLR மற்றும் RLLR இரண்டையும் 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து, EBLR 8.25% ஆகக் குறைத்துள்ளது. இது ஜூன் 11, 2025 முதல் அமலுக்கு வந்தது. இந்த மாற்றம் வீடு, தனிநபர் மற்றும் MSME கடன்களுக்கும் பொருந்தும்.
கனரா வங்கி RLLR விகிதத்தை 8.75% என்ற அளவில் இருந்து 8.25% ஆகக் குறைத்துள்ளது, இது ஜூன் 12, 2025 முதல் அமலுக்கு வரும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஜூன் 9, 2025 முதல் PNB RLLR விகிதத்தை 8.85% என்ற அளவிருந்து 8.35% ஆகக் குறைத்துள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா BoB அதன் BRLLR விகிதத்தை 8.65% என்ற அளவிருந்து 8.15% ஆகக் குறைத்துள்ளது. புதிய விகிதங்கள் ஜூன் 7, 2025 முதல் அமலுக்கு வருகின்றன.
பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் RBLR விகிதத்தை 8.85% என்ற அளவிலிருந்து 8.35% ஆகக் குறைத்துள்ளது. இது ஜூன் 6, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.