மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்! கதாநாயகியாக நடிக்கும் ஸ்வீனி? யார் இவர்?

Dhanush - Sweeny: இதுவரை 2 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள தனுஷ் 3வது முறையாக மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

1 /6

பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்வீனி மற்றும் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற படத்தில் இணைவதாக கூறப்படுகிறது.

2 /6

2018ம் ஆண்டு வெளியான 'The Extraordinary Journey of the Fakir' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். பின்னர் ஆண்டனி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கிய 'The Gray Man' படத்தில் நடித்து இருந்தார்.

3 /6

இந்நிலையில் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

4 /6

தனுஷ் தற்போது மூன்றாவது இயக்குனராக 'இட்லி கடை' மற்றும் NEEK படத்தில் பிஸியாக இருக்கிறார். நடிகராக 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இளையராஜா பயோபிக்கிலும் நடிக்க உள்ளார்.

5 /6

மறுபுறம் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, 90களில் பிரபலமாக இருந்த முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் கிறிஸ்டி மார்ட்டின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் முடிவடைகிறது.  

6 /6

இந்த படத்திற்காக ஸ்வீனி கடுமையாக உழைத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் குத்துச்சண்டை பயிற்சியில் தீவிரமாக ஈடுபடும் புகைப்படங்களை ஸ்வீனி பகிர்ந்துள்ளார்.