மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்! கதாநாயகியாக நடிக்கும் ஸ்வீனி? யார் இவர்?
பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்வீனி மற்றும் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற படத்தில் இணைவதாக கூறப்படுகிறது.
2018ம் ஆண்டு வெளியான 'The Extraordinary Journey of the Fakir' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். பின்னர் ஆண்டனி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கிய 'The Gray Man' படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது மூன்றாவது இயக்குனராக 'இட்லி கடை' மற்றும் NEEK படத்தில் பிஸியாக இருக்கிறார். நடிகராக 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இளையராஜா பயோபிக்கிலும் நடிக்க உள்ளார்.
மறுபுறம் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, 90களில் பிரபலமாக இருந்த முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் கிறிஸ்டி மார்ட்டின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் முடிவடைகிறது.
இந்த படத்திற்காக ஸ்வீனி கடுமையாக உழைத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் குத்துச்சண்டை பயிற்சியில் தீவிரமாக ஈடுபடும் புகைப்படங்களை ஸ்வீனி பகிர்ந்துள்ளார்.