Dhoni piano keys shirt price: எம். எஸ். தோனி சமீபத்தில் அணிந்திருந்த சட்டை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த சட்டையின் விலை என்ன? அப்படி அந்த சட்டையில் அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக தோனி இருக்கிறார். அவர் இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பையை வென்று தந்து இருக்கிறார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இவரது தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்றது.
சாதாரான நடுத்தர குடும்பத்தில் பிறந்த தோனி, தற்போது பல கோடி சொத்துக்கு அதிபதியாகி உள்ளார். தோனி செய்யும் விஷயங்கள் அவ்வப்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். உதாரணத்திற்கு அவரது ஹேர் ஸ்டைலை கூறலாம்.
இந்த நிலையில், சமீபத்தில் தோனி அணிந்திருந்த ஒரு சட்டை ரசிகர்களின் கவனத்தை ஈருத்துள்ளது. அவர் அணிந்திருந்த சட்டையில் பியானோ கீ போர்டு டிசைன் மற்றும் ஆடை முழுவதும் மியூசிக்கல் நோட்ஸ் இடம் பெற்றிருந்தது.
இந்த சட்டையை அணிந்திருக்கும் படியான தோனியின் புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த சட்டையின் விலை ரூ. 72000 ஆகும். அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கிறது என கேட்டால், இந்த சட்டை பட்டு துணியால் ஆனதாம். இந்த சட்டை அமீரி என்ற பிராண்ட்டை சேர்ந்தது.