மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்! பைசன் ரிலீஸ் தேதி இதுதான்!

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம் வரும் அக்டோபர் 17 தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

1 /6

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

2 /6

இந்நிலையில் வரும் 2025 அக்டோபர் 17 அன்று தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

3 /6

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.

4 /6

நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

5 /6

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது.  

6 /6

மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை,  அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.