துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ்! 2 தளங்களில் வெளியாகிறது..எதில், எப்போது பார்க்கலாம்?

Written ByYuvashree
Published: May 08, 2026, 10:17 PM IST|Updated: May 08, 2026, 10:17 PM IST

Dhurandhar The Revenge OTT Release : ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், துரந்தர் தி ரிவெஞ்ச். இந்த படத்தை ஆதித்யா தார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Dhurandhar The Revenge OTT Release : பாலிவுட்டில், சமீபத்தில் வெளியாகி மாபெறும் வெற்றி பெற்ற படம், துரந்தர் தி ரிவெஞ்ச். இந்த படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆதித்யா தார் இயக்கியிருக்கிறார். இதில் மாதவன், அக்‌ஷய் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது.

Dhurandhar 21/5

துரந்தர் 2

இந்தியாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய சாதனை நிகழ்த்திய திரைப்படம், துரந்தர் 2. இந்த படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருக்கிறார். இப்படம், கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியான இந்த படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Story2/5

கதை

துரந்தர் படத்தில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, கராச்சி நிழலுலகத்தை தகர்த்து, இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகளை ரகசியமாக வேட்டையாடும் இந்திய உளவாளியின் கதையாக இருக்கிறது.

Aditya Dhar3/5

ஆதித்யா தார்

‘துரந்தர்’ படத்தின் இரண்டு பாகங்கள் மிகவும் வெற்றிகரமாகவும், சாதனை ஓட்டமாகவும் இந்திய சினிமா சரித்திரத்தில் அமைந்துவிட்டன. அதையடுத்து அதன் இயக்குநர் ஆதித்யா தார், தனது கனவுப் படமான ‘அஸ்வத்தாமா’வுக்குத் தயாராகி வருகிறார். ரன்வீர் சிங்தான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஒரு பெரிய தமிழ் நடிகரை நடிக்கவைக்கப் போவதாகவும், அவரை விரைவில் சந்தித்துப் பேசிய பிறகு தகவல் சொல்வதாகவும் இயக்குநர் ஆதித்யா தர் கூறியுள்ளார். அவர் யாராக இருக்கும் என்பதுதான் இப்போது கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

Box Office Collection4/5

வசூல்

துரந்தர் 2 திரைப்படம், மொத்தம் ரூ.1,800 கோடிக்கும் மேல் உலகளவில் வசூலித்து சாதனை செய்தது. இதையடுத்து, இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

OTT5/5

ஓடிடி

துரந்தர் 2 திரைப்படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகிறது. நெட்ஃப்ளிக்ஸில் வரும் மே 14ஆம் தேதி வெளிநாடுகளில் வெளியாகிறது. இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. ஆனால், அதன் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.