Sachin Tendulkar Net Worth: 52வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு விவரம் குறித்து இங்கு காணலாம்.
1/8'கிரிக்கெட்டின் கடவுள்' என சச்சின் டெண்டுல்கரை (Sachin Tendulkar) ரசிகர்கள் பொதுவாக அழைப்பார்கள். அப்பேற்பட்ட கடவுள் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
2/8இருப்பினும் அவரது தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவரது பிறந்தநாள் குறித்து எவ்வித பதிவையும் இன்று போடவில்லை. அவர் கடைசியாக பகல்காம் சம்பவத்தில் மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
3/8அந்த பதிவில்,"பகல்ஹாமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துயரமான தாக்குதல்களால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சோதனையை கடந்து செல்ல வேண்டும். இந்த இருண்ட நேரத்தில் இந்தியாவும் உலகமும் அவர்களுடன் ஒற்றுமையாக நிற்கின்றன. உயிரிழப்புக்கு நாங்கள் இரங்கல் தெரிவித்து நீதிக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என குறிப்பிட்டிருந்தார்.
4/8சச்சின் பிறந்தநாள் குறித்த பதிவுகளை தவிர்த்திருந்தாலும், உலகம் முழுவதும் இருந்து கிரிக்கெட் ரசிகர்களின் தங்கள் 'கடவுளின்' பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, சச்சின் டெண்டுல்கரின் சொத்து விவரம் குறித்து பலரும் இணையத்தில் தேடும் நிலையில் அதுகுறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
5/8சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் 2013ஆம் ஆண்டில் சச்சின் ஓய்வுபெற்றுவிட்டார். ஐபிஎல் தொடரில் மட்டும் 6 சீசன்களில் அவர் ரூ.38.29 கோடியை சம்பளமாக பெற்றிருந்தார். இவரது கார் கலெக்சனை பார்த்தால், அவரின் முதல் காரான மாருதி 800 தொடங்கி பல சொகுசு கார்களை வாங்கிக் குவித்துள்ளார்.
6/8ரூ. 5 கோடி மதிப்பிலான Range Rover SV, ரூ.2.29 கோடி மதிப்பிலான BMW i8, ரூ.1.75 கோடி மதிப்பிலான BMW M6 Gran Coupe, ரூ.3.13 கோடி மதிப்பிலான Porsche 911 Turbo S உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார். மேலும், பார்முலா 1 ரேஸில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும் சச்சின் நண்பருமான மைக்கேல் ஷூமேக்கர் இவருக்கு Ferrari 360 Modena காரை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் 300 கார்களே புழக்கத்தில் இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடலான BMW M5 30 Jahre Edition சச்சினிடம் இருக்கிறது. இது போக பல கார்கள் லிஸ்டில் உள்ளன.
7/8இந்தியன் சூப்பர் லீக் தொடரில் கேரளா பிளாஸ்டஸ் என்ற கால்பந்து அணிக்கும், பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கும் இவர் இணை உரிமையாளர் ஆவார். பல ஸ்டார்அப் மற்றும் டெக் நிறுவனங்களில் இவர் முதலீடு செய்துள்ளார். மேலும், SRT Sports Management மற்றும் True Blue போன்ற நிறவனங்களையும் நடத்தி வருகிறார்.
8/8தற்போது 52 வயதை அடைந்துள்ள சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள பாந்த்ராவில் மூன்று மாடி பங்களாவில் வசித்து வருகிறார். இந்த பங்களாவை அவர் ரூ.75 கோடிக்கு வாங்கி ரூ.25 கோடிக்கு மறுசீரமைப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. 6000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பங்களாவில் எண்ணிலடங்கா சொகுசு வசதிகள் உள்ளன. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மொத்த சொத்து விவரம் ரூ.1450 கோடி என கூறப்படுகிறது.