LCU-வில் இணையும் பிரபல நடிகை.. லோகேஷ் கனகராஜ் சொன்ன அந்த விஷயம்!

Written ByR Balaji
Published: Jul 25, 2025, 09:06 PM IST|Updated: Jul 25, 2025, 09:06 PM IST

Lokesh Kanagaraj: எல் சி யு-வில் ஒரு புதிய நடிகை இணைய உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  

 

1/5

எல் சி யு என்பதை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என கூறுகின்றனர். இந்த கான்செப்டின் கீழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல படங்களை இயக்கி வருகிறார். 

2/5

இந்த கான்செப்டின் கீழ் இதுவரை, கைதி, விக்ரம், லியோ உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளது. இன்னும் பல படங்கள் இதன் கீழ் வர இருப்பதாக லோகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

3/5

இந்த நிலையில், LCU-வில் ஒரு புதிய நடிகை இணைய இருப்பதாக அவர் கூறி உள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். 

4/5

அதில் அவர் கூறியதாவது, நான் ஒரு நடிகைக்காக கதை எழுதுகிறேன். அது எல்சியு-வில் ஒரு புதிய கதாபாத்திரமாக இருக்கும். கைதி 2 படத்தில் இரண்டு முதல் 3 புதிய கதாபத்திரங்கள் இருக்கும் என கூறினார். இதனை வைத்து ரசிகர்கள் அந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியாக இருக்குமோ என யூகித்து வருகின்றனர். 

5/5

லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு அவர் கைது 2 படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.