இயக்குநராக ரூ.50 கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ்! ஹீரோவாக எத்தனை கோடி வாங்குகிறார்?

Lokesh Kanagaraj DC Movie Salary : தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது DC என்கிற படம் மூலம் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார்.

Lokesh Kanagaraj DC Movie Salary : சில படங்களையே இயக்கியிருந்தாலும், சென்சேஷனல் இயக்குநர் என்கிற பெயரை பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இவர், இப்போது ஹீரோவாகவும் களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்குகிறார். இதற்கு DC என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. 

1 /7

வெகு சில படங்களையே இயக்கியிருந்தாலும், மக்கள் மத்தியில் சென்சேஷனல் இயக்குநராக அறியப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், மளமளவென விஜய், ரஜினி, கமல் என பலரை வைத்து படம் எடுத்துவிட்டார்.

2 /7

லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் களமிறங்க இருக்கிறார். இந்த படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்குகிறார். இவர்கள் இருவரும் திரைக்கு பின்னால் நல்ல நண்பர்களும் கூட.

3 /7

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் வாமிகா கபி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.

4 /7

லோகேஷ் கனகராஜ் - வாமிகா கபி நடிக்கும் இந்த படத்திற்கு DC என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் லோகேஷின் பெயர் Devadas, வாமிகாவின் பெயர் Chandhra எனவே இப்படத்திற்கு DC என பெயரிடப்பட்டு இருக்கிறது.

5 /7

DC படத்தின் ஷூட்டிங், தற்போது நடந்து வருகிறது. இதன் வேலைகளில் பிசியாக இருக்கும் லோகேஷ், இப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.

6 /7

லோகேஷ், DC படத்திற்காக சுமார் ரூ.35 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

7 /7

கடைசியாக கூலி படத்தை இயக்கியிருந்த லோகேஷ் கனகராஜ், அந்த படத்திற்காக சுமார் ரூ.50 கோடி சம்பளமாக பெற்றதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.