இந்தியாவிலேயே மிக மிக மலிவான விமான டிக்கெட் கிடைக்கும் ஒரே ஏர்போர்ட் இதுதான்..!

Fri, 13 Dec 2024-3:58 pm,

இந்தியாவில் விமான பயணம் என்பது பல கோடி மக்களின் கனவாக இருக்கிறது. ஆனால், அதிகமான டிக்கெட் விலை காரணமாக விமான பயணம் மேற்கொள்ள தயங்குகிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே மிக மிக குறைவான விலையில் விமான டிக்கெட் (Cheapest flight tickets India) கொடுக்கப்படும் ஒரு ஏர்போர்ட் இருக்கிறது. அந்த ஏர்போர்ட் பற்றி சுவாரஸ்ய தகவல் தான் இங்கே தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். 

டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் எரிபொருளுக்கு 25% VAT செலுத்த வேண்டும். வாட் வரியை குறைத்தால் மட்டுமே இங்கு இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணத்தை குறைக்க முடியும். ஆனால் இப்போது கிரேட்டர் நொய்டா அருகே ஜெவாரில் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

அந்த விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சோதனை விமானத்தையும் வெற்றிகரமாக இயக்கியுள்ளது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜெவார் விமான நிலையத்திற்கு வெறும் 10 நிமிட விமான பயணம் மட்டுமே ஆகும். 

இந்த சூழலில் தான் அந்த விமான நிலையத்தில் டிக்கெட் விலை மிக குறைவாக இருக்கும் என்ற நல்ல செய்தி வெளியாகியுள்ளது. டெல்லி விமான நிலையத்தை விட நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் டிக்கெட் விலை குறைவாக இருக்கப்போகிறது. 

ஏனெனில், டெல்லி விமான நிலையத்தை விட நொய்டா விமான நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் எரிபொருள் கிடைக்கும். விமான நிலையம் கட்டப்படுவதற்கு முன், ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன் கீழ் எரிபொருளுக்கு 1% VAT மட்டுமே விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்தது. 

மாறாக, டெல்லி விமான நிலையத்தில் இருந்து பறக்கும் விமானங்கள் எரிபொருளுக்கு 25% VAT செலுத்த வேண்டும். வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதால் விமானக் கட்டணம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நொய்டா விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு, விமான நிறுவனங்கள் இப்போது வழித்தடங்களுக்கான ஆய்வுகளை நடத்தி வருகின்றன. கணக்கெடுப்பு முடிந்ததும், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு டிக்கெட் விலை அறிவிக்கப்படும். வாட் வரி குறைக்கப்பட்டதால் மக்கள் குறைந்த விலையில் டிக்கெட்டுகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டிக்கெட் கட்டணத்தை 15-20% வரை குறைக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் விமான நிலையத்தை அமைத்தே டெல்லி விமான நிலையத்தில் நெரிசலைக் குறைப்பதற்காக தான். அதனால்தான் டிக்கெட் விலையை குறைக்கும் வகையில் இந்த திட்டம் போடப்பட்டுள்ளது. நொய்டா விமான நிலையத்திலிருந்து விமானங்கள் ஏப்ரல் 2025 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 2025 இல் முதல் கட்ட பணிகள் முடிவடைந்தவுடன், ஜெவார் விமான நிலையம் ஆண்டுக்கு 12 மில்லியன் பயணிகளை சமாளிக்கும் திறனை பெற்றிருக்கும். தற்போது, டெல்லி விமான நிலையம் 73.6 மில்லியன் பயணிகளையும், மும்பை விமான நிலையம் 52.8 மில்லியன் பயணிகளையும், பெங்களூரு விமான நிலையம் 37.5 மில்லியன் பயணிகளையும் கையாள்கிறது. ஜெவார் விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு 6,200 ஹெக்டேர். இந்த விமான நிலையத் திட்டத்திற்கும் ₹30,000 கோடி செலவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link