8 கோடி PF உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு: இனி ATM மூலமே பணம் எடுக்கலாம்

Published: Sep 13, 2025, 08:21 AM IST|Updated: Sep 13, 2025, 08:21 AM IST

EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. தீபாவளிக்கு முன்னதாக அவர்களுக்கு பெரிய ஒரு பரிசு கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

EPFO 3.0 Latest News: தீபாவளிக்கு முன்பு சுமார் 8 கோடி இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு சில சிறப்பு வசதிகளை தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 10-11 தேதிகளில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கபடவுள்ளன.

EPFO1/10

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி உள்ளது. தீபாவளிக்கு முன்பு அவர்களுக்கு மிகப்பெரிய நன்மை நடக்கவுள்ளது. ஊழியர்களுக்கு சில சிறப்பு வசதிகள் கிடைக்கவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

EPF ATM Withdrawal2/10

ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி

ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை மத்திய அரசு விரைவில் வழங்கக்கூடும். இது குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தது. இது குறித்து அக்டோபர் 10-11 தேதிகளில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. இருப்பினும், இறுதி நிகழ்ச்சி நிரல் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

EPF Members3/10

இபிஎஃப் உறுப்பினர்கள்

தீபாவளிக்கு முன்பு சுமார் 8 கோடி இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு சில சிறப்பு வசதிகளை தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து வரும் நாட்களில் இன்னும் அதிக தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகின்றது.

EPFO 3.04/10

EPFO 3.0

அடுத்த மாதம் நடக்கவுள்ள கூட்டத்தில் EPFO, EPFO 3.0 பற்றி சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என கூறப்படுகின்றது. வங்கி போன்ற வசதிகளைத் தொடங்குவதை குறித்து இதில் பரிசீலிக்கப்படலாம். இதன் கீழ், ஏடிஎம் அல்லது யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் வருங்கால வைப்பு நிதியின் ஒரு பகுதியை எடுக்கும் வசதி கிடைக்கும்.

Minimum Monthly EPS Pension5/10

குறைந்தபட்ச மாத இபிஎஸ் ஓய்வூதியம்

தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 லிருந்து ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உயர்த்தும் திட்டத்தையும் அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO 3.06/10

EPFO 3.0 பல நன்மைகளைக் கொண்டுள்ளது

EPFO 3.0 பல நன்மைகளைக் கொண்டுள்ளது. சந்தாதாரர்களுக்கு பணம் எடுப்பது அல்லது பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வது போன்ற விஷயங்கள் எளிதாகும் வகையில் PF சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதே இதைத் தொடங்குவதன் நோக்கமாகும். இது முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப சோதனை காரணமாக அது தாமதமானது.

UPI ATM Withdrawal7/10

UPI -இல் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி

EPFO 3.0 இன் கீழ், இபிஎஃப் உறுப்பினர்கள் ATM இல் இருந்து தங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். இதுமட்டுமின்றி, Google Pay, PhonePe அல்லது Paytm போன்ற செயலிகள் மூலமாகவும் PF பணத்தை எடுக்க முடியும். 

EPF Members8/10

இபிஎஃப் உறுப்பினர்கள்

அதாவது, இனி இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் தொகையை எடுக்க, PF அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த பணியை வீட்டில் இருந்தபடியே செய்து முடிக்கலாம். இதன் உதவியுடன், நீங்கள் PF கணக்கின் இருப்பு மற்றும் பங்களிப்பைக் கண்காணிக்கவும் முடியும்.

EPFO 3.09/10

EPFO 3.0

இந்தப் புதிய அமைப்பின் கீழ், EPFO ​​சந்தாதாரர்களுக்கு ATM போன்ற அட்டை வழங்கப்படும். இந்த அட்டை PF கணக்குடன் இணைக்கப்படும். இதன் மூலம் நீங்கள் ATM-ல் இருந்து உங்கள் PF பணத்தை எளிதாக எடுக்க முடியும். UPI-யிலிருந்து பணத்தை எடுக்க ,PF கணக்கை UPI-யுடன் இணைக்க வேண்டும்.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்படுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ தளங்களை காண அறிவுறுத்தப்படுகிறது.