Exam Result Confidence: எதிர்பார்க்கும் தேர்வு முடிவுகள் எந்தவொரு மாணவனையும் உள்மனத்தில் அழுத்தமுடைய வைக்கும். ஆனால், அவை வாழ்க்கையின் முடிவல்ல, ஒரு நிலையைக் காட்டும் ஒரு தற்காலிக சோதனை மட்டுமே.
Overcome Exam Fear: வெற்றி என்றால் மட்டும் தான் நாம் மேன்மை பெற்றவர்கள் அல்ல, தோல்வி வந்தால் கூட நாம் நிறைய கற்றவர்கள். எதிர்காலம் இன்னும் வாய்ப்புகளால் நிரம்பி இருக்கிறது என்பதை நினைவில் வைத்து முடிவுகளைத் தைரியத்துடன் எதிர்கொள்வது முக்கியம்.
தோல்வி என்பது முடிவு அல்ல அது வெற்றிக்கான ஒரு படிக்கட்டு மட்டுமே, தோல்வியை விடப் பயம் தான் உங்களை இடைநிறுத்தும்.
முடிவுகள் மட்டுமே உங்கள் திறமையை காண்பிக்காது, உங்களுடைய முயற்சி, முன்னேற்றம் தான் உங்களின் உண்மையான திறமையை வெளிப்படுத்தும்.
நம்பிக்கை(Hope): நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் முயற்சியை கொடுத்திருக்கீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.உண்மையான உழைப்பு என்று வீணாகாது.
பயத்தை விடுங்கள்(Let go of fear): மனதை அசைக்காமல் வைத்துக் கொள்ளுங்கள், பயம் உங்கள் அடுத்தகட்ட வாழ்க்கையை எடுத்துச் செல்லாது.
உதவியைத் தேடிப் பேசுங்கள்(Seek help and speak up): பெற்றோர்கள் ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் உங்களை ஊக்குவிக்கக் காத்திருக்கிறார்கள்.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்(Learn from failure): தோல்வி ஒரு விரோதியாக உங்களுக்கு வருவது அல்ல, அது உங்களை வலுப்படுத்தும் ஒரு ஆசிரியராகத் திகழ்கிறது.
இலக்கு(Goal): இந்த தேர்வு முடிவுகள் மட்டும் வாழ்க்கையின் எல்லாம் அல்ல, உங்களிடம் இன்னும் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
முன்னேறு(Move forward): தைரியத்துடன் வெற்றியோ, தோல்வியோ, நம்பிக்கையுடன் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். வாழ்வின் வெற்றிகள் இன்னும் உங்கள் அருகில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது.