உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா? இந்த 5 தவறுகளை மறந்தும் செய்யாதீர்கள்!

உடல் எடை குறைக்கும்போது நாம் செய்யும் சில தவறுகள் நம் இலக்கை எட்ட தாமதப்படுத்தலாம். 

நம்மில் பலர் உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட பல விஷயங்களை பின்பற்றலாம். ஆனால், நமக்கே தெரியாமல் நாம் சில தவறுகளை செய்வதால் உடல் எடையை குறைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதை குறித்தே இங்கு பார்க்கப்போகிறோம். 

1 /5

கோடை கால வெப்பத்தில் குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒன்றை தேடுவது இயற்கையானது. ஸ்மூத்திகள், பழச்சாறுகள், தேங்காய் நீர் போன்றவை. இவை ஆரோக்கியமானதாக தோன்றினாலும் அவர் பெரும்பாலும் சர்க்கரைகள் அல்லது முழு கொழுப்புள்ள பால், சிரப்கள் மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் அதிக கலோரி பொருட்களால் நிரம்பி உள்ளன. 

2 /5

உடல் எடை குறைப்புக்கு பலரும் உணவை தவிர்ப்பது உதவும் என நினைக்கிறார்கள். ஆனால் உணவை தவிர்ப்பது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இதன் மூலம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஆற்றல் குறைகிறது. இதனால் உடல் எடை குறைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. 

3 /5

கோடைக் காலத்தில் சிப்ஸ், பப்படம், நம்கீன் அல்லது ஊறுகாய் போன்ற உப்பு நிறைந்த சிற்றுண்டிகள் சாப்பிடுவது. குறிப்பாக குளிர் பானங்களுடன் சாப்பிடுவது உடல் எடை குறைப்பதில் பிரச்சனை ஏற்படுத்துகிறது. அதிக சோடியம் உள்ள உணவுகள் உடலில் தண்ணீரை தக்கவைத்து, வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும்,  உங்கள் கலோரி கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

4 /5

தண்ணீர் உடல் எடை குறைப்புக்கு சிறந்தாகும். குறிப்பாக கோடை காலத்தில் உங்கள் உடல் வியர்வை மூலம் திரவங்கள் வேகமாக இழக்கும்போது, லேசான நீரிழப்பு பெரும்பாலும் பசியுடன் குழப்பமடைகிறது. இதனால் தேவைக்கு அதிகமாக சாப்பிடும் சூழல் ஏற்படுகிறது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் உங்கள் சக்தி மற்றும் உடற்பயிற்சி செயல்திறனை குறைக்கிறது. 

5 /5

பொதுவாக கோடைக்காலம் ஐஸ்கிரீம் இல்லாமல் முழுமையடையாது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால், உங்கள் கலோரி இலக்குகளை தடம் புரளச் செய்யும். ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் 300 முதல் 400 கலோரிகளை எளிதில் தாண்டும்.