முகம் எப்போதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிமையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை அன்றாடம் செய்வதால் தசைகள் வலுவாகும் மற்றும் முகம் வடிவம் பெறும்.
1/8Neck strectches : தலையை ஒரு பக்கமாகத் திருப்பி மேல் நோக்கிச் சாய்க்கவும். இதனை 10 வினாடிகள் நீங்கள் தினமும் செய்து வாருங்கள். இது உங்களுக்கு முக அழகு மேம்படுத்தும் மற்றும் மன நிம்மதி கிடைக்கும்.
2/8Chewing gum : தாடை தசைகளை வலுப்படுத்த இந்த பயிற்சி எளிதானது. ஆனால் இதனை அதிகமாகச் செய்யக்கூடாது. குறைவாகவே செய்ய வேண்டும்
3/8Jaw release : மெல்லுவதுபோன்று உங்கள் தாடையைத் திறந்து மூடவும். இந்த பயிற்சி தினமும் நீங்கள் செய்து வந்தால் உங்கள் முகம் பொலிவாகும். மேலும் கூடுதல் அழகு பெறுவீர்கள்.
4/8Cheek puff : உங்கள் வாயில் காற்றை நிரப்பி பலூன் வாய்போல் வைக்கவும். இது உங்கள் கன்னத்தில் இருக்கும் கொழுப்பைக் கரைத்து முகத் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
5/8Face stretch : வாயை அகலமாகத் திறந்து முகத்தை நீட்டி உங்கள் கைகள் வைத்து புருவங்களை உயர்த்தவும். இது உங்கள் முகத்தின் தசைகளை வலுவாக்கும்.
6/8Fish face : மீன் போன்ற முகத்தை வைக்கவும். அன்றாடம் இதனைக் காலை மற்றும் மாலை செய்யும். இப்படிச் செய்வதால் உங்கள் முகத்தில் இருக்கும் தசைகளை டோனிங் செய்வதற்கு உதவுகிறது
7/8Chin lift : உங்கள் கன்னத்தை மேல் நோக்கி உயர்த்தி உங்கள் கழுத்தை முன்புறமாக நீட்டவும். இந்த போஸை 10 வினாடிகள் வைத்திருக்கவும். இதுபோன்று அன்றாடம் செய்து வாருங்கள். இது உங்கள் தாடை கீழ் இருக்கும் இரட்டை கன்னத்தைக் குறைக்கும்.
8/8(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்தவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)