Bad Breath Remedy: கோடைக் கால வெப்பம், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை வாயை வறடையச் செய்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பிரச்சனைகளைத் தடுக்க விரைவான தீர்வுகள் என்ன என்பதைக் கீழே காணலாம்.
Natural Breath Freshener: வெயிலில் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? 10 நிமிடங்களில் வீட்டிலேயே சிறந்த தீர்வைக் காணலாம். கடுமையான கோடையில் நீரிழப்பு அதிகரிப்பதால் வாய் வறட்சி ஏற்படுகிறது. இதனால் உமிழ்நீர் குறைந்து, பாக்டீரியாவால் துர்நாற்றம் உருவாகிறது. இதை தவிர்க்க எளிய வழிகளை இங்கே பார்க்கலாம்.
கோடையில் வாய் வறட்சி ஒரு பொதுவான பிரச்சனை(Dry mouth is a common problem in summer): வெப்பம் மற்றும் நீரிழப்பால் உமிழ்நீர் குறையலாம், இது துர்நாற்றத்துக்கு வழிவகுக்கும்.
தண்ணீர் குடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்(Give importance to drinking water): தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் மற்றும் இயற்கை பானங்களை குடிப்பது வாய் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
வாய்வழி சுத்தத்தை பராமரிக்கவும்(Maintain oral hygiene): பல் துலக்குதல், நாக்கு சுத்தம், மவுத்வாஷ் ஆகியவை துர்நாற்றத்தை தடுக்கும்.
உமிழ்நீரை தூண்டும் உணவுகள் சாப்பிடுங்கள்(Eat foods that stimulate salivation): சிட்ரஸ் பழங்கள், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்றவை வாய் ஈரத்தன்மையை ஊக்குவிக்கும்.
காஃபின், மது ஆகியவற்றைத் தவிர்க்கவும்(Avoid caffeine and alcohol): இவை நீரிழப்பை அதிகரித்து வாய் வறட்சி மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
இரவில் வாய்ச் சுகாதாரத்தைக் கவனிக்கவும்(Take care of your oral hygiene at night): தூங்குவதற்கு முன் பல் துலக்குதல், ஈரப்பதமூட்டியின் உதவி ஆகியவை உதவும்.
வாய் வறட்சி – புறக்கணிக்க வேண்டாம்(Dry mouth – don't ignore it): இதை அலட்சியமாக விட்டால் தொற்று மற்றும் துர்நாற்றம் ஏற்படலாம், எனவே தக்க பராமரிப்பு அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.