வியர்வை வாடைக்கு தினசரி பெர்ஃபியூம்/ரோல் பயன்பாடு – நல்லதா கெட்டதா?

weat Odor Solutions: நீங்கள் நம்பும் பாதுகாப்பு உணர்வு, உண்மையில் உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது என்பதைப் பற்றி யோசித்ததுண்டா? ஒரு சின்னத் தேர்வும், ஒரு புதுமையான மாற்றமும் உங்கள் தினசரி வாழ்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

Daily Perfume Use Effects: தினமும் நீங்கள் பயன்படுத்தும் அந்த வாசனைப் பாட்டிலில் இருக்கும் சில உண்மைகள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். ஒவ்வொரு விஷயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்வதன் மூலம்நாளை மறுநாள் உங்கள் பழக்கம் மாற வாய்ப்பிருக்கிறது.

1 /8

வியர்வை இயற்கையானது(Sweating is natural): மனித உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் இயற்கையான செயல்தான் வியர்வை, ஆனால் அதனுடன் வரும் வாசனையே பெரும்பாலும் இடையூறாக அமைகிறது. 

2 /8

பெர்ஃபியூம் எப்படி செயல்படுகிறது(How perfume works): பெர்ஃபியூம்கள் வாடையை மறைக்கும் வகையில் செயல்படுகின்றன. ஆனால் வியர்வைச்சுரப்பைத் தடுக்க முடியாது. சில வாசனைகள் உடலை சற்று குளிர்விக்கும் தன்மையைக் கொண்டிருக்கலாம். 

3 /8

ரோல்-ஆன் எப்படி வேறுபடுகிறது(How is the roll-on different?): ரோல்-ஆன்( deodorant/antiperspirant) உடனடி வாசனத்தைக் குறைக்கும் அல்லது வியர்வையை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகின்றன. சில ரோல்-ஆன்கள் வாசனையை மட்டும் குறைக்கும். சிலவற்றை வியர்வைச்சுரப்பை நேரடியாக தடுக்க முயற்சிக்கும். 

4 /8

தினசரி பயன்பாடு- நல்லதா?(Daily use- good?) மிதமாகவும், சரியான முறையில் பயன்படுத்தினால் பெரும்பாலும் பாதுகாப்பானதாகும். ஆனால் தின்சரி நீண்டகால பயன்பாட்ட்டால் சிலருக்கு தோல் அழற்சி அல்லது எரிச்சல் ஏற்படக்கூடும். 

5 /8

பக்கவிளைவுகள் ஏற்படுமா?(Are there any side effects?) ஆம், சில பெர்ஃபியூம்கள்  மற்றும் ரோல்-ஆன்களில் உள்ள ரசாயனங்கள் (அலுமினியம், ஆல்கஹால் போன்றவை) சிலருக்கு தோல் எரிச்சல், கருப்புத்தாழை போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 

6 /8

பயன்படுத்தும் முன் சோதனை அவசியம்(Testing is necessary before use): புதிய தயாரிப்புகளை நேரடியாக முழுவதுமாக பயன்படுத்தாமல், முதலில் ஒரு சிறிய தோல் பகுதியில் பூசி சோதனை செய்ய வேண்டும். தோலுக்கு ஏற்றதா என உறுதிப்படுத்திக் கொண்டு மட்டுமே பயன்படுத்தவும். 

7 /8

மாற்றான இயற்கை வழிகள்(Alternative natural ways): வெள்ளை சுண்ணாம்பு, ஆலோவேரா ஜெல், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான வழிகளும் வாடையை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. ரசாயனங்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு இது சிறந்த மாற்று தீர்வாக அமையும். 

8 /8

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் கிறிஸ்டோபரின் தனிப்பட்ட அனுபவம்தான். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)