Health Tips For Summer: கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பைமட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் சிறப்பான கவனத்தைக் கடைப்பிடித்துவருகிறார். குறிப்பாக அதிகரித்துவரும் கோடை வெயிலில் உடல் நலத்தையும், சருமத்தையும் எவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் பின்பற்றுகிறார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
Keerthi Suresh Summer Health Tips: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிசியான வேலையிலும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியக்கவனத்தைக் காட்டுவதில் சிறிதும் பாரபட்சம் பார்க்கமாட்டார் என்பதை நேர்காணலில் கூறியிருப்பதை அறிந்திருப்போம். அந்தவகையில் இவர் இந்த கோடை வெயிலில் தனது உடலையும், சருமத்தையும் எவ்வாறு பராமரிக்கிறார் என்பதை பார்ப்போம்.
நடிகை கீர்த்தி சுரேஷ்(Keerthy Suresh) தனது உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க கோடைக்காலத்தில் பின்பற்றும் சில வழிமுறைகள் பலருக்கும் ஊக்கமளிப்பதாகும். இவை எளிதில் பின்பற்றக்கூடியவை மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல பலன்களை அளிக்க உதவும்.
தண்ணீர் குடிப்பது அவசியம்(Drinking water is essential): கோடைக்கால வெப்பத்தில், நாளொன்றுக்குக் குறைந்தது 6–7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் எனக் கீர்த்தி சுரேஷ் கூறுகிறார். தண்ணீரை போதிய அளவில் குடிப்பதால் உடல் புத்துணர்வுடன், சுறுசுறுப்புடன் இருக்கும்.
சத்தான உணவுகள்(Nutritious foods): உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க, கீர்த்தி சுரேஷ் தனது உணவில் நீர்ச்சத்து மிக்க காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அடிப்படையாகச் சேர்த்துக்கொள்கிறார்.
சரியான உடற்பயிற்சி(Proper exercise):வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தினமும் இருவேளை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கடைப்பிடிக்கிறார்.
சருமப் பராமரிப்பு(Skin care):சூரிய வெப்பத்தில் சருமத்தைப் பாதுகாக்கக் கீர்த்தி சுரேஷ் சன்ஸ்கிரீம் மற்றும் ஆலோசகரின் வழிகாட்டலின் படி சரும பராமரிப்பு கிரீம்களை பயன்படுத்துகிறார்.
சுவாசப்பயிற்சி மற்றும் தியானம்(Breathing exercises and meditation): மனம் தெளிவாகவும், நிம்மதியாகவும் இருக்க சுவாசப்பயிற்சி மற்றும் தியானம் அவசியமாகச் செய்கிறார்.
நல்ல தூக்கம்(Good sleep): கோடைக்காலத்தில் நல்ல உடல் நலத்திற்குத் தினமும் குறைந்தது 8 மணி நேரம் உறங்குவது அவசியம் எனக் கூறுகிறார்.
கீர்த்தி சுரேஷின் இந்த வழிமுறைகள் எளிமையானவை, ஆனால் அவை நமக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.