IPL Most Maiden Overs: ஐபிஎல் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் இதுவரை 133 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் மொத்தம் 8 மெய்டன்களை வீசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தவால் குல்கர்னி, 92 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 8 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், 103 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 10 மெய்டன்களை வீசி உள்ளார்.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இதுவரை 104 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 11 மெய்டன்கள் வீசி உள்ளார்.
இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் 119 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 14 மெய்டன்களை வீசியுள்ளார்.
176 போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள புவனேஷ்வர் குமார் 14 மெய்டன்களை வீசியுள்ளார்.