ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அதிக முறை டக் அவுட்டான வீரர் யார் என்று பார்ப்போம்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானம் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மைதானங்களில் ஒன்று. காரணம் இந்த மைதானத்தில் தான் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை வென்றது.
அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டாக வான்கடே மைதானம் உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் வான்கடே பிடித்த மைதானமாக உள்ளது.
இந்த மைதானத்தில் பலர் பல ரெக்கார்டுகளை வைத்திருந்தாலும், அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையையும் சிலர் வைத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
வான்கடே மைதானத்தில் அதிக முறை டெக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் அம்பத்தி ராயுடு உள்ளார். இதுவரை அவர் 7 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.
அவரைத் தொடர்ந்து சூர்யாகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா தலா 5 முறை டக் அவுட் ஆகி உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நமன்தீர் மூன்று முறை டக்அவுட் ஆகியுள்ளார்.
வான்கடே மைதானத்தில் டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் பார்த்திவ் பட்டேல், ஹர்பஜன் சிங், சுப்மான் கில் ஆகியோர் உள்ளனர்.
இந்த பட்டியலில் தோனி 21வது இடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் வான்கடே மைதானத்தில் 23 இன்னிங்ஸ் விளையாடி 412 ரன்கள் அடித்துள்ளார் தோனி.