Jasprit Bumrah: பும்ராவின் முதல் சர்வதேச விக்கெட் யாருடையது தெரியுமா?

இந்திய அணி மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பும்ரா நம்பர் ஒன் பவுலராக உள்ளார். அவர் எடுத்த முதல் விக்கெட் யாருடையது என்று தெரிந்து கொள்ளுங்கள். 
1 /7

இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வெல்வதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார். 

2 /7

ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றார். மேலும் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் பவுலர் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.  

3 /7

ஜஸ்பிரித் பும்ரா 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல், டி20 போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பும்ரா எடுத்த முதல் விக்கெடுகளை பற்றி பார்ப்போம்.  

4 /7

2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பும்ராவின் முதல் ஐபிஎல் விக்கெட்டாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.  

5 /7

2016ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் டேவிட் வார்னரின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் தனது முதல் டி20 விக்கெட்டை எடுத்தார் பும்ரா.  

6 /7

2016ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் தனது முதல் ஒருநாள் போட்டி விக்கெட்டை கைப்பற்றினார்.  

7 /7

2018ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் விக்கெட்டை எடுத்ததன் மூலம் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.