அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை.. யார் தெரியுமா? நயன்தாரா இல்லை!

Written ByR Balaji
Published: Sep 19, 2025, 02:02 PM IST|Updated: Sep 19, 2025, 02:02 PM IST

Highest Paid Actress: அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் யார்? அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் இருப்பவர்கள் யார் யார்? என்பது குறித்து இதில் பார்க்கலாம். 

 

மஞ்சு வாரியர் 1/5

மஞ்சு வாரியர்

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் லிஸ்ட்டில் 5வது இடத்தில் இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர், ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். 

தமன்னா2/5

தமன்னா

நடிகை தமன்னா இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சமீப காலமாக படங்களில் நடிப்பதை விட படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். இவர் ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்வதாக கூறப்படுகிறது. ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 3 கோடி வரை பெற்று வருகிறார். 

நயன்தாரா3/5

நயன்தாரா

பிரபல நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் ஜவான் படத்தில் மட்டும் நடிக்க இவர் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

ராஷ்மிகா மந்தனா 4/5

ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 13 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். சமீபத்தில் வெளியான சல்மான் கானின் சிக்கந்தர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில் அவர் 13 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார். 

சாய் பல்லவி 5/5

சாய் பல்லவி

இந்த பட்டியலின் டாப்பில் உள்ளவர் நடிகை சாய் பல்லவி. இவர், ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இயக்குநர்களின் விருப்பமான நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார். சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.