Weight Loss With Fewer Calories: உடல் எடையைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடுதான் முக்கியம் என உறுதியாகக் கூற முடியாது. நம்முடைய வாழ்க்கை முறை, தினசரி பழக்கவழக்கங்கள் போன்றவை கூட இதற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன.
Reduce Food Intake? Reduce Calories?: மருத்துவர்கள் பெரும்பாலும் உடல் எடையைக் குறைக்கக் குறைந்த கலோரி உணவுகளைப் பரிந்துரைப்பார்கள். ஏன் உணவின் அளவை குறைப்பதை விட கலோரிகளை குறைப்பது முக்கியம்? இதற்கான சரியான காரணங்களை இப்போது பார்ப்போம்.
கலோரிகள் என்றால் என்ன?(What are calories?) கலோரிகள் என்பது உணவுகளில் உள்ள சக்தியின் அளவை குறிக்கும் கணக்கீடு. எடை குறைய, உடலில் உள்ள கலோரிகள் தேவையான அளவுக்குக் குறைக்கப்பட வேண்டும்.
உணவு குறைப்பதா? கலோரிகளை குறைப்பதா?(Reduce food intake? Reduce calories?) உணவின் அளவை குறைப்பதை விட, அதிலுள்ள கலோரிகளை கட்டுப்படுத்துவது முக்கியம். குறைவான கலோரி உணவுகளைத் தேர்வு செய்வது உடல் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.
கலோரிகள் குறையும்போது எடை எப்படிக் குறையும்?(How to lose weight when calories are reduced) உடலுக்குத் தேவையான அளவிற்குக் குறைவாக கலோரிகளை எடுத்தால், உடலில் உள்ள கொழுப்பை எரித்து எடையைக் குறைக்க உதவும்.
உணவைத் தவிர்க்க வேண்டாமே?(Don't skip meals.) உடலுக்குத் தேவையான சத்துக்கள் பெற உணவைத் தவிர்க்கக் கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மெட்டபாலிசம் பாதிக்காது(Does not affect metabolism): உணவு மட்டுமே குறைத்தால் மெட்டபாலிசம் (சேமித்துள்ள கொழுப்பை எரிக்கும் செயலி) மந்தமாகிவிடும். ஆனால் சரியான அளவில் கலோரிகளை மட்டுமே குறைத்தால், உடல் சக்திவாய்ந்ததாக இருக்கும்.
ஊட்டச்சத்துக்கள்(Nutrients) (சத்துக்கள்) முக்கியம்: குறைந்த கலோரி உணவுகளை எடுத்தாலும், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு போன்ற சத்துக்கள் உள்ள உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
நல்ல வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்(Leads to a good lifestyle): கலோரி கட்டுப்பாட்டுடன், சீரான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி இருந்தால், நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.