காய் & பழங்களை ஏன் ஃப்ரிட்ஜில் ஒன்றாக வைக்கக்கூடாது தெரியுமா?

ஒவ்வொரு பருவத்துக்கும் விதவிதமான காய்கறிகளும், பழங்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு பழமும் தனிச் சிறப்பான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. உதாரணமான எலுமிச்சை, கொழுமிச்சை, இரண்டுமே ஏறக்குறைய ஒரே சத்துக்களைக் கொண்டிருந்தாலும் இரண்டுக்கும் உள்ள சத்துக்களும் அவற்றின் அளவுகளும் மாறுபடும்.

இது கோடைக்காலமாக இருப்பதால் உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் (refrigerator) வைத்து பாதுகாக்கிறோம். ஆனால், எல்லா உணவுப் பொருட்களையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Also Read | இளமையான தோற்றம் வேண்டுமா? இந்த உணவை சாப்பிடுங்க!

1 /4

தர்பூசணியை வெட்டாமல் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால், அது பழத்தின் சுவையையும் அதன் நிறத்தையும் மாற்றக்கூடிய “chill injury” ஏற்பட வழிவகுக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதேபோல, பழத்தை நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் அதில் பாக்டீரியா வளர்ச்சி பெறும் என்ற பயமும் உள்ளது. எனவே அதை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க விரும்பினால், முதலில் அதை வெட்டி பின்னர் உள்ளே வைக்கலாம்.

2 /4

கோடைக்காலத்தில் தர்பூசணிகள், மற்றும் மாம்பழங்கள் நன்றாக விளையும் . பழங்களை நாம்  குளிர்சாதன பெட்டியில் சேமிப்பதால் அவற்றின் சுவை கெட்டுப்போகும் என்று உங்களுக்குத் தெரியுமா? இவற்றை ஒருபோதும் வெட்டாமல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது 

3 /4

இதேபோல், மாம்பழங்களையும் வெட்டாமல் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். அவற்றை வாங்கியதும், சிறிது நேரம் சாதாரண நீரில் ஊறவைத்து, பின்னர் வெளியில் வைக்கவும். சாப்பிடுவதற்கு முன்னதாக, அவற்றை வெட்டிய பிறகு சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். வெட்டப்பட்ட பழங்களை மூடி வைக்க மறக்காதீர்கள். பழங்களை ஒருபோதும் திறந்து வைக்க வேண்டாம்.

4 /4

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக வைப்பது ஒரு நல்ல நடைமுறை அல்ல. பழங்களையும், காய்களையும் எப்போதும் தனித்தனி கூடைகளில் தனித்தனியாக அடுக்கி வைக்க வேண்டும். இரண்டும், வெவ்வேறு வகையான வாயுக்களை வெளியிடுகின்றன. எனவே, அவற்றை ஒன்றாக சேர்த்து வைப்பதால் அவற்றின் சுவை மற்றும் ஊட்டச்சத்தும் மாறிவிடும்.  

You May Like

Sponsored by Taboola