Sleeping Problem Solution: உங்களுக்கு போதுமான ஆழ்ந்த தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியர்கள் பலர் போதுமான அளவிற்கு தூங்குவது உள்ள என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.
Sleeping Problem Side Effects: உங்களால் நல்ல தூங்க முடியாமல் இருக்கவும், நடு இரவில் தூக்கம் கலையவும் என்ன காரணம் என இந்தியா முழுவதும் 43,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பல திடுக்கிடும் கக்ரங்கள் வெளியாகி உள்ளது.
நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைந்து விடுகிறதா? அதிகாலை வேளையில் எழுந்து அதன்பின் தூக்கமே வராமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் 43,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 61% ஆண்களும், 39% பெண்களும் பங்கேற்றனர். இதில் சுமார் 59% பேர் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவது தெரிய வந்துள்ளது. சுமார் 43000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 6% பேர் மட்டுமே தங்கள் தூக்கத்தை கெடுப்பது எது என்பது பற்றிய தெளிவினை பெற்றிருந்தனர்.
39% பேர் மட்டுமே 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதாகவும், 39% பேர் நான்கு முதல் 6 மணி நேரம் உறங்குவதாகவும், 20% பேர் வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே உறங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களுள் வெறும் 2% பேர் மட்டுமே எட்டு முதல் 10 மணி நேரம் தூங்குவதாக கூறியுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆய்விதழ் தரவுகளின் படி தினமும் ஏழு முதல் எட்டு மணி நேர உறக்கம் அனைவருக்கும் கட்டாயம் அவசியம். ஆனால் இந்தியாவில் பல லட்சம் மக்கள் போதிய உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருவது சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
72% பேர் அதாவது 14952 பேர் கழிவரை செல்வதற்காக தூக்கம் கலைந்து விடுவதாக காரணம் கூறியுள்ளனர். வெளிப்புற சப்தம் மற்றும் கொசுக்களால் தூக்கம் தடைபடுவதாக 22% பேர் தெரிவித்துள்ளனர். 6% பேர் மொபைல் அழைப்பு மற்றும் குறுந்த தகவல்கள் தூக்கத்தை கலைப்பதாக கூறியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க நள்ளிரவில் குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் மூன்று மணி வரை தூக்கத்தில் இருக்கும் பலர் திடீரென உறக்கம் கலைந்து எழுந்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மன அழுத்தத்தால் தூண்டப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகரிப்பே இதற்கு காரணம் என்று வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்தம் காரணமாக மெக்னீசியம் குறைபாடு இருந்தால் கார்டிசோல் அளவு அதிகரிக்கும் என்றும், கார்டிசோல் அளவு குறைவாக உள்ளவர்கள் தங்கள் மெக்னீசியம் அளவை பரிசோதிக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.